இந்தியா

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது உண்மை என்பதை நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படுவதாக கேரள முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘தி கேரளா ஸ்டோரி’. மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குநர் சுதிப்தோ சென், இந்த படத்தின் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'தி கேரள ஸ்டோரி' படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

இந்த டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் இது கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அப்போதே சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

இதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகின்றனர். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்ற செய்யும்படி செய்கின்றனர்.

அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்றமுடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கின்றனர். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் மதவாதம் இல்லாத கேரளாவில் இது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக பலரும் இந்த படத்தின் ட்ரைலருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தி படமான இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் வரும் மே 5-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படம் சொல்கிறது. படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. கேரள மாநிலத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

மேலும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. சங் பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை, ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் இந்த படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது போல், உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என கேரள மாநில முஸ்லீம் யூத் லீக் தெரிவித்துள்ளது.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முஸ்லீம் யூத் லீக்கின் பொது செயலாளர் பி.கே.பிரோஸ், "சங்பரிவார் தொழிற்சாலையில் அரசியல் நோக்கத்திற்காக பொய் மட்டுமே சொல்லும் மிகப்பெரிய பொய்களில் ஒன்று லவ் ஜிஹாத் மூலம் சிரியாவுக்கு மதமாற்றம் செய்த குற்றச்சாட்டு. சங் ஸ்பான்சர் படம் கேரளாவில் 32000 பேரை இடம் மாற்றம் செய்ததாக கூறினால், சராசரியாக ஒரு பஞ்சாயத்துல 30 பேராவது இருப்பார்கள். ஆனால் ஒருவரின் முகவரி கேட்டால், எதையும் கேட்காத மாதிரி தலை குனிந்து உட்கார்ந்து கொள்வீர்கள்.

ஆகையால் ஆதாரத்தை கொண்டு வருபவர்களுக்கு முஸ்லிம் யூத் லீக் ஒரு கோடி பரிசு வழங்குவதாக அறிவிப்பு. இவ்வாறு முஸ்லிம் யூத் லீக்கின் மாவட்ட மையங்களில் உள்ள கவுண்டர்களில் சான்று வைத்திருப்பவர்கள் தயங்காமல் ஒரு கோடி வாங்கலாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை : ஆதாரத்தை காண்பித்தால் ரூ.1 கோடி பரிசு.. சவால் விட்ட கேரள முஸ்லீம் லீக் !

மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் "‘லவ் ஜிஹாத்’ மூலம் 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக படத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவும்.

அதற்கான ஆதாரத்தை வழங்குவதற்கான சேகரிப்பு மையங்கள் மே 4 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்கப்படும். சேகரிப்பு மையங்களில் யார் வேண்டுமானாலும் விவரங்களைக் கொடுக்கலாம். வரும் மே 4-ம் தேதி காலை 11 மணி முதல் 5 மணி வரை அலுவலகம் திறக்கப்பட்டிருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதோடு சமூக ஊடகங்களில் இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சங் பரிவாரின் இதுபோன்ற சிந்தனைக்கு அரசியல் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories