இந்தியா

’இது டம்மி Phone-டா’.. நிறுவனத்தின் கண்ணில் மண்ணை தூவி 10 iPhoneகளை திருடிய அமேசான் டெலிவரி பாய்!

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய 10 ஐபோன்களை டெலிவரி ஊழியரே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’இது டம்மி Phone-டா’.. நிறுவனத்தின் கண்ணில் மண்ணை தூவி 10 iPhoneகளை திருடிய அமேசான் டெலிவரி பாய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் பயன்படுத்துவது தற்போது அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. இந்த இ -காமர்ஸ் தளத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையுமே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி இ - காமர்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கும் போது சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதில் வேறு ஒரு பொருட்கள் மாற்றி வரும் சம்பவங்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த தவறை தடுக்க இ- காமர்ஸ் தளங்கள் முயற்சி செய்தாலும் அவர்களால் இதைத் தடுக்க முடியவில்லை.

’இது டம்மி Phone-டா’.. நிறுவனத்தின் கண்ணில் மண்ணை தூவி 10 iPhoneகளை திருடிய அமேசான் டெலிவரி பாய்!

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய 10 ஐ போன்களை அமேசான் டெலிவரி ஊழியரே திருடிய சம்பவம் புகார் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹரியானாவில் மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் அமேசானில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் அமேசானில் டெலிவரி எக்ஸிகியூட்டியாக இருக்கும் லலித் என்பவர் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரிக்கு அனுப்பப்பட்ட 10 ஐபோன்களை திருடியதாகக் காவல் நிலையத்தில் மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன் நிறுவனம் புகார் கொடுத்துள்ளது.

’இது டம்மி Phone-டா’.. நிறுவனத்தின் கண்ணில் மண்ணை தூவி 10 iPhoneகளை திருடிய அமேசான் டெலிவரி பாய்!

அந்த புகாரில், "லலித் 10 ஐ போன்கள் மற்றும் ஒரு ஏர்போட்ஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்வதற்காக எடுத்துச் சென்றார். பிறகு அந்த முகவரியில் அவர்கள் இல்லை என கூறி பார்சலை எங்களிடமே திருப்பி கொடுத்து விட்டார்.

இதையடுத்து அந்த பார்சலை ஆய்வு செய்தபோது அதில் போலியான ஐ போன்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் பார்சல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள லலித்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இ - காமர்ஸ் தளங்கள் மீதான நம்பிக்கை கேள்வி எழுப்பும் வகையில் உள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories