இந்தியா

பா.ஜ.க MLA-வை ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த பொதுமக்கள்.. கர்நாடகாவில் செல்வாக்கை இழக்கும் பாஜக!

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாளி தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக வந்த பாஜக எம்.எல்.ஏ-வுக்கு பொதுமக்கள் எதிர்த்து முழக்கம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க MLA-வை ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த பொதுமக்கள்.. கர்நாடகாவில் செல்வாக்கை இழக்கும் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

பா.ஜ.க MLA-வை ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த பொதுமக்கள்.. கர்நாடகாவில் செல்வாக்கை இழக்கும் பாஜக!

இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் தொடர் இந்துத்வா போக்கு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையால் பல இடங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அடிப்படை வசதி கூட செய்துக்கொடுக்கவில்லை என பாஜக வேட்பாளர்களை ஊருக்குள் விடாமல் மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர். அந்தவகையில் இரண்டு நாட்களுக்குள் முன்பு பா.ஜ.க பிரச்சார வாகனத்தை பொதுமக்கள் சூறையாடினர்.

பா.ஜ.க MLA-வை ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த பொதுமக்கள்.. கர்நாடகாவில் செல்வாக்கை இழக்கும் பாஜக!

இதனையடுத்து நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாளி தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக வந்த பாஜக எம்.எல்.ஏ-வுக்கு பொதுமக்கள் எதிர்த்து முழக்கம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கிராமத்திற்கு கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை, ஐந்து ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை, கிராமத்தில் குடிநீர் வசதி இல்லைஎன கிராம மக்கள் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories