இந்தியா

”கர்நாடகாவில் 1.50 லட்சம் கோடி ஊழல் செய்த பா.ஜ.க அரசு”: பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

கர்நாடகாவில் பா.ஜ.க அரசு 1.50 லட்சம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாகப் பிரியங்கா காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

”கர்நாடகாவில் 1.50 லட்சம் கோடி ஊழல் செய்த பா.ஜ.க அரசு”: பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

”கர்நாடகாவில் 1.50 லட்சம் கோடி ஊழல் செய்த பா.ஜ.க அரசு”: பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடகாவில் பா.ஜ.க அரசு 1.50 லட்சம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம் டி.நரசிப்புராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "பா.ஜ.க ஆட்சியில் கர்நாடகா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளில் அனைத்து இடங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் நேரடியாகப் பிரதமருக்கு 40 சதவீதம் கமிஷன் குறித்து கடிதம் எழுதி உள்ளனர். பள்ளி கல்லூரி சங்கங்கள் இங்கு நடக்கும் ஊழல் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

”கர்நாடகாவில் 1.50 லட்சம் கோடி ஊழல் செய்த பா.ஜ.க அரசு”: பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

பா.ஜ.க எம்.எல்.ஏ. விருப்பாச்சப்பாவின் மகன் ரூ. 8 கோடி லஞ்சம் பெற்ற பணத்துடன் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி வரை ஊழல் செய்துள்ளனர். இந்த பணம் இருந்திருந்தால் 250 கிலோ மீட்டர் சாலை வசதி ஏற்படுத்த முடியும், மருத்துவமனைகள் உருவாக்க முடியும், பள்ளிகளை உருவாக்க முடியும், 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்திருக்க முடியும். ஆனால் பா.ஜ.க வெறும் கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories