இந்தியா

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!

ஆஸ்திரேலியாவிலுள்ள பாஜக பிரமுகர் கொரியன் பெண்களை குறிவைத்து, போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பாஜக பிரமுகர்கள் செய்யும் அருவருக்கத்தக்க செயல்கள் ஏராளம். அதிலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முக்கிய பங்கு பாஜக சார்ந்தே காணப்படுகிறது. பாஜகவினர், பாஜக ஆளும் மாநிலம் உள்ளிட்ட பாஜக சார்ந்தவைகளே இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல கடல் தாண்டி வெளிநாடுகளிலும் பாஜகவினர் இதே போல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலுள்ள பாஜக பிரமுகர் ஒருவர் பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!

ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான் பாலேஷ் தன்கர் (43). இவர் 'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி பி.ஜே.பி' எனும் வெளிநாட்டு பா.ஜ.க உறுப்பினர்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த சூழலில் இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. அதாவது பெண்களுக்கு போதை பொருள் கொடுத்து, கட்டாய படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். அதன்படி இவர் மீது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!

அப்போது இந்த வழக்கு தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது பாஜக பிரமுகரான பாலேஷ் தன்கர், பெண்கள் மீது அதீத ஆசையில் உள்ள நபர் என்றும், அதிலும் கொரிய பெண்கள் மீது ஒரு வெறித்தனமான ஆசையில் இருந்ததும் தெரியவந்தது. இதனால் இவர், கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்வதற்குப் பெண்கள் வேண்டும் என்று விளம்பரம் செய்து, அதற்காக வரும் கொரிய பெண்களுடன் ஆசையாக பழகி வந்துள்ளார்.

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!

மேலும் அந்த பெண்களுக்கு அடிக்கடி சிறப்பு பரிசு கொடுப்பதும், அவர்களை விருந்துக்கு அழைப்பதும், தேவையானவற்றை செய்துகொடுப்பதுமாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்களை தனியாக விருந்துக்கு அழைக்கும்போது அவர்களுக்கு குடிக்க கொடுக்கும் பொருளில் போதை மருந்து கலந்து கொடுத்து வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தனது அறையில் உள்ள கடிகாரம் ஒன்றில் இரகசியமாக கேமரா பொருத்தி அதில் தான் செய்யும் பாலியல் காட்சியை வீடியோ ரெக்கார்ட் செய்து அதை தனது கம்ப்யூட்டரில் அந்த பெண்களின் பெயர்களிலே சுமார் 47 பைல்களாக வைத்துள்ளார். இவை அனைத்தும் விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பான வழக்கறிஞர் இதனை குறிப்பிட்டு வாதிட்டார்.

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!

அப்போது பாலேஷ் தன்கர் சார்பாக வாதம் செய்த வழக்கறிஞர், பாலேஷ் தன்கருடன் நெருக்கமாக இருந்த பெண்கள் அனைவரும் முழு சம்மதத்துடன்தான் அவருடன் உறவிலிருந்தார்கள் என்றார். ஆனால் தக்க வீடியோ ஆதாரத்துடன் பெண்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இது வலுக்கட்டாயம் என அடித்து வாதிட்டார்.

தொடர்ந்து அந்த வீடியோவை கண்ட நீதிபதியும் அந்த வீடியோவில் பெண்கள் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சுவது போல் உள்ளது என்று கூறி, பாலேஷ் தன்கர் மீது சாட்டப்பட்ட 13 பாலியல் வழக்கு உட்பட 39 குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

கொரியன் பெண்களே குறி.. 13 பாலியல் வழக்குகள்.. 47 வீடியோக்கள் : ஆஸி., சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர்!

இதைத்தொடர்ந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலேஷ் தன்கர், தனக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிபதியிடம் அழுது மன்றாடியுள்ளார். ஆனால், அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, அவரை சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும் அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் விரைவில் தண்டனை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள பாஜக பிரமுகர் கொரியன் பெண்களை குறிவைத்து, போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories