இந்தியா

உறவுக்கார பெண்ணுடன் இரகசிய உறவு.. காதலுக்காக 2 வயது மகனை மூச்சுத்திணறவைத்து கொன்ற கொடூர தந்தை !

உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய இளைஞர், தனது 2 வயது குழந்தையை கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறவுக்கார பெண்ணுடன் இரகசிய உறவு.. காதலுக்காக 2 வயது மகனை மூச்சுத்திணறவைத்து கொன்ற கொடூர தந்தை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்திருக்கும் தாராவியில் வசித்து வருபவர் ரஹ்மத் அலி. ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தாஹிரா பானோ என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளது.

இந்த சூழலில் ரஹ்மத்துக்கு அவரது உறவுக்கார பெண்ணுடன் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. அது திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொள்வர். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண் ரஹ்மத்திடம் கேட்டுள்ளார். அவரும் அதற்கு சரி என்று சொல்ல, ஆனால் முதல் குடும்பத்தை முழுமையாக விட்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

உறவுக்கார பெண்ணுடன் இரகசிய உறவு.. காதலுக்காக 2 வயது மகனை மூச்சுத்திணறவைத்து கொன்ற கொடூர தந்தை !

இதனால் தனது மனைவி மற்றும் மகனை பிரிய எண்ணியுள்ளார் ரஹ்மத். ஆனால் பிரிவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதாலும், பிரிந்தால் மனைவி, பிள்ளைக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதாலும் அவர்களை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று தனது 2 வயது குழந்தையை வீட்டில் இருந்து கொஞ்சம் தூரமாக கூட்டி சென்றுள்ளார்.

அங்கே இருக்கும் நதி ஒன்றில் சிறுவனை நீரில் மூழ்கி கொலை செய்து, பின்னர் பிளாஸ்டிக் பையில் போட்டு வீசியுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்த ரஹ்மத்திடம் குழந்தையை பற்றி மனைவி கேட்க தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடியுள்ளார். இதைதொடர்ந்து மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

உறவுக்கார பெண்ணுடன் இரகசிய உறவு.. காதலுக்காக 2 வயது மகனை மூச்சுத்திணறவைத்து கொன்ற கொடூர தந்தை !

அப்போது அவர்கள் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் ரஹ்மத். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய இளைஞர், தனது 2 வயது குழந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories