இந்தியா

டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு.. ஆராய்ச்சி மாணவியிடம் ரூ.4 லட்சம் மோசடி.. நடந்தது என்ன ?

ஆன்லைன் வேலைவாய்ப்பு என கூறி ஆராய்ச்சி மாணவியிடம் ரூ.4 லட்சம் வரை மோசடி செய்த கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் மூலம் பகுதி நேர  வேலைவாய்ப்பு.. ஆராய்ச்சி மாணவியிடம் ரூ.4 லட்சம் மோசடி.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுச்சேரி, வில்லியனூர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி, இவர் காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பிஹெச்.டி படித்து வருகிறார். ஆராய்ச்சி படிப்புக்குப் பணம் தேவை என்பதால், பகுதி நேரமாக ஏதேனும் வேலை வாய்ப்பு உள்ளதா என்பதை இணையத்தில் தேடி வந்து அதற்காக இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு, சில தினங்களுக்கு முன்பு வேலை வாய்ப்பு குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது. டெலிகிராமில் பகுதிநேரமாக வேலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வர அதை ஏற்றுக்கொண்டு ஆரம்பத்தில் ரூ.1,000 முதல் ரூ.3,000வரை சிறிய தொகைகளை டெபாசிட் செய்து அதில் வேலை செய்துள்ளார்.

டெலிகிராம் மூலம் பகுதி நேர  வேலைவாய்ப்பு.. ஆராய்ச்சி மாணவியிடம் ரூ.4 லட்சம் மோசடி.. நடந்தது என்ன ?

அதில் சிறிது லாபம் வந்த நிலையில், மேலும் ரூ.30,000ஐ செலுத்தி பணியைத் தொடர்ந்துள்ளார். அதன்பின்னர் அவரை நான்கு பேர் கொண்ட டெலிகிராம் குழுவில் சேர்த்து பணி செய்ய கூறியுள்ளனர். தொடர்ந்து ரூ.70,000 மதிப்புள்ள பணியைச் செய்யச் சொன்ன நிலையில், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த வேலையே செய்யயில்லை என்றால் பணம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டதால் வேறு வழியின்றி அவர் ரூ. 70,000 பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவரால் பணியில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி இழந்த பணத்தை திரும்பப் பெறவும், தவறை சரி செய்யவும் மீண்டும் ஒரு பணியினை எடுத்துச் செய்ய ரூ.1,50,000 செலுத்தச் கூறிய நிலையில், பணத்தை இழக்கக்கூடாது என அதையும் அந்த பெண் செய்துள்ளார்.

டெலிகிராம் மூலம் பகுதி நேர  வேலைவாய்ப்பு.. ஆராய்ச்சி மாணவியிடம் ரூ.4 லட்சம் மோசடி.. நடந்தது என்ன ?

அந்த வகையில் சுமார் ரூ.4 லட்சம் வரை அந்த பெண் அந்த நிறுவனத்திடம் இழந்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர்கள் பணத்தை செலுத்தசொன்ன நிலையில், தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து சைபர் க்ரைம் காவல் பிரிவில் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories