இந்தியா

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

தன்பாலின உறவை அவர்கள் தற்செயலாக நடந்த உறவாக நினைக்காமல், அதையும் தாண்டிய பந்தமாக உணர்வோருக்காக அதைச் சிந்தித்தோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவை எப்படியாவது இந்து நாடாக மாற்றவேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்ட நாள் அஜாண்டாவை நிறைவேற்றும் நோக்கிலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக CAA-NRC உட்பட்ட மசோதாக்களை கொண்டுவருவதும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு, உதவித் தொகை உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்கும் வேளையை செய்து வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க அரசு ‘LGPTQIA+’ (lesbian, gay, bisexual, transgender, queer, questioning, intersex, asexual, and the + holds space) சமூக மக்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன என கேள்வி எழும் வகையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்திலிருந்தே LGPTQIA+ சமூக மக்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்யும் பா.ஜ.க கும்பல், தற்போது தன்பாலின திருமணத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

கடந்த 2008ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருந்தது. ஆனாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்ககூடாது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

இந்த வழக்கில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு, தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்கக்கூடாது என்றும் மேலும் தன்பாலின திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்க கூடாது. ஏனென்றால் இவர்கள் வளர்க்கக்கூடிய குழந்தைகளுக்கு பாலினம் குறித்த புரிதல் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்திக்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானர்.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

அப்போது, நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் வாதத்தை எடுத்துரைத்த துஷார் மேத்தா, “தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்கக்கூடிய விவகாரங்களை உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது. இது ஒரு சமூகம் சார்ந்த விவகாரம் என்பதால், இதில் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குதான் உள்ளது. இந்த விவாரத்தை நீதிமன்றம் விசாரிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முதலில் முடிவு எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என வந்துள்ள மனுக்கள் ‘நகர்ப்புற உயரடுக்கு மக்களின் கருத்துகளாகவே உள்ளது. எனவே நீதிமன்றம் இவற்றை அனுமதித்து ஒரு புது சமூக நிறுவன சூழலை நீதிமன்றம் உருவாக்ககூடாது. மேலும் அனைத்து மதங்களிலும் திருமணம் என்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு ஆழமான நம்பிக்கையாக இருக்கிறது. திருமணம் என்பது இந்து மதத்தில் ஒரு புனிதமாக பார்க்கப்படுகிறது.” எனத் தெரிவித்தது.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஒன்றிய அரசின் வாதத்தை பரிசீலிக்கும் அதேவேளையில், இந்த வழக்கின் மெரிட்டுகளை அடிப்படையாக கொண்டு இந்த விவகாரத்தை அனுக வேண்டும். அப்போதுதான் எந்த கோணத்தில் வழக்கை எடுத்துச் செல்லலாம் என முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துஷார் மேத்தா, இந்த ஆரம்பக் கட்ட விசாரணைக்கு எங்களால் பங்கேற்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அவரின் வாதங்களை மறுத்து பேசிய நீதிபதிகள், ஒன்றிய அரசு இப்படியான வாதங்களை பேசக் கூடாது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. இதன் தன்மையை ஒன்றிய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

மேலும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை நாங்கள் மறுக்கவில்லை. அதேவேளையில், இந்தவிவகாரத்தில் நாடாளுமன்றம் தலையிடாமல் இருக்குமாயின் அதனை சுட்டிக்காட்டும் கடமை நீதிமன்றத்திற்கு உண்டு. சமூதாயம் பரிணாம வளர்ச்சி அடையக்கூடியது. அது தன் பாலின உறவை குற்றமற்றதாக தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் தன்பாலின உறவை குற்றமற்றது என்பதைத் தான் பிரிவு 377ல் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த சமூதாயத்தின் பார்வை இன்று மாறியிப்பது ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

நீதிபதிகளின் இத்தகைய வாதத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தன்பாலின திருமணங்களை அங்கிரித்தால் அவை தனிச் சட்டத்தின் கீழ் குழப்பங்களை ஏற்படுத்தும். மேலும் திருமணச் சட்டங்கள் என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுப்படக்கூடியது.

எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசின் கருத்துகளை கட்டாயம் கேட்க வேண்டும். ஒரு ஆண் மற்றும் பெண் இடையிலான திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்க முடியும். ஒருவர் ஆணா, பெண்ணா என்பதை ஒருவரின் பிறப்புறுப்புதான் முடிவு செய்யும் எனக் கூறினார்.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

இதனையடுத்து ஆணா, பெண்ணா குறித்து பிறப்புறுப்புதான் முடிவு செய்யும் என்ற ஒன்றிய அரசின் வாதங்களுக்கு கண்டனத்தை பதிவு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இருப்படி இருந்தால்தான் ஆண் என்ற கருத்தாக்கமும், இப்படி இருந்தால்தான் பெண் என்ற கருத்தாக்கமும் என்று எதுவும் இல்லை; ஆண் மற்றும் பெண் என்பதை வெறும் பிறப்புறுப்பின் மூலமாக மட்டும் முடிவு செய்ய முடியாது.

ஒருவரின் பாலினம் என்பது பிறப்புறுப்பை காட்டிலும் சிக்கலானது. தன் பாலின திருமணம் நகர்ப்புறம் சார்ந்தது அல்லது வேறு ஏதாவது என்பது குறித்து அரசாங்கத்திடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என தெரிவித்தார்.

“தன்பாலின உறவு வெறும் உடல் சார்ந்தது அல்ல; உணர்வுகள் சார்ந்தது”: பாஜக அரசுக்கு பாடம் புகட்டிய நீதிபதிகள்!

இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்புடைய விவரங்களை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “LGBTQIA+ சமூக மக்களின் உறவுகள் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டதே ஒரு வானவில் நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியபோதே தன்பாலினத்தவர் இடையேயான 'திருமணம் போன்ற நிலையான உறவுகளை' நாங்கள் சிந்தித்தோம். தன்பாலின உறவை அவர்கள் தற்செயலாக நடந்த உறவாக நினைக்காமல், அதையும் தாண்டிய பந்தமாக உணர்வோருக்காக அதைச் சிந்தித்தோம்.

சிலருக்கு அந்த உறவு வெறும் உடல் சார்ந்தது இல்லை. உணர்வுகள் சார்ந்தது. அவர்களுக்காக தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது பற்றி நாங்கள் சிந்தித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories