இந்தியா

கூடி நின்ற கூட்டத்தில் காணாமல் போன சிறுமி.. தேடி கண்டுபிடித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

10 வயது சிறுமியை மர்ம நபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடி நின்ற கூட்டத்தில் காணாமல் போன சிறுமி.. தேடி கண்டுபிடித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது 10 வயது சிறுமியை மர்ம நபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சந்த்வா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நான்காம் வகுப்பு பயின்று வரும் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார்.

கூடி நின்ற கூட்டத்தில் காணாமல் போன சிறுமி.. தேடி கண்டுபிடித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பக்கத்தில் கூடி வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த கூட்டத்தில் அந்த சிறுமியின் இருந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு அந்த சிறுமி காணாமல் போயுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் அடுத்த நாளும் சிறுமியை தேடிச் சென்ற நிலையில், ஒதுக்குபுறமாக இருந்த இடத்தில் ஆடைகள் அற்ற நிலையில் சிறுமி சடலமாக கிடந்துள்ளார்.

கூடி நின்ற கூட்டத்தில் காணாமல் போன சிறுமி.. தேடி கண்டுபிடித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலிஸார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் சிறுமி கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories