இந்தியா

சினிமா பாணியில் லஞ்சப்பணம் கடத்தல்.. பணமரமாக மாறிய வாழைமரம்.. கேரளாவில் நடந்த சோதனையில் அதிர்ச்சி !

வாழைமரத்தில் லஞ்சப்பணத்தை மறைத்து வைத்து கடத்திய போது அவற்றை போலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

சினிமா பாணியில் லஞ்சப்பணம் கடத்தல்.. பணமரமாக மாறிய வாழைமரம்.. கேரளாவில் நடந்த சோதனையில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரளா மாவட்டம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நடுபுனி என்ற இடத்தில சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் வாகன தணிக்கை நடத்தப்பட்டு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும்.

அந்த வகையில் நடுபுனி சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலிஸாருக்கு ஒரு வண்டியில் ஏராளமான பணம் கொண்டுசெல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலிஸார் ஒரு குறிப்பிட்ட வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

சினிமா பாணியில் லஞ்சப்பணம் கடத்தல்.. பணமரமாக மாறிய வாழைமரம்.. கேரளாவில் நடந்த சோதனையில் அதிர்ச்சி !

அந்த வாகனத்தை வாழை மரங்கள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், போலிஸார் வண்டி முழுக்க தேடியும் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்போது அங்கிருந்த போலிஸார் எதேச்சையாக கொண்டுசெல்லப்பட்ட வாழை இலைகளை சோதனை செய்துள்ளார்.

அப்போது அதில், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் பணம் வாழை மட்டை பிரியும் இடத்தில் சுருட்டப்பட்டு லாவகமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைத்து வாழை மரங்களையும் போலிஸார் சோதனை செய்ததில் அதேபோல பணம் சுருட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சினிமா பாணியில் லஞ்சப்பணம் கடத்தல்.. பணமரமாக மாறிய வாழைமரம்.. கேரளாவில் நடந்த சோதனையில் அதிர்ச்சி !

இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் வாகனஓட்டிகளிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது லஞ்சப்பணத்தை கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து லைவ் ஸ்டாக் உதவியாளர் விஜயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஷாஜி, ஃபீல்டு ஆபிசர் அசோகன் ஆகியோரிடம் போலிஸார் விசாரித்தபோது வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சத்தை பெற்று, அதை வாழை மரத்தில் ஒளித்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories