இந்தியா

கணவன் உயிரை காப்பாற்ற.. முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்: நடந்தது என்ன?

ராஜஸ்தானில் முதலையிடம் இருந்து கணவனைக் காப்பாற்றிய மனைவிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கணவன் உயிரை காப்பாற்ற.. முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்திற்குட்பட்ட மந்தராயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். இந்த தம்பதிகள் ஆடுகளை வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தம்பதி தங்களது ஆடுகளைக் கிராமத்தின் அருகே இருந்த ஆற்றுக்கு ஆடுகளுக்குத் தண்ணீர் குடிப்பதற்காக கூட்டிச் சென்றனர். அப்போது பன்னே சிங் ஆற்றில் இறங்கியபோது திடீரெ ஒரு முதலை ஒன்று அவரது காலை கடித்து இழுத்துள்ளது.

கணவன் உயிரை காப்பாற்ற.. முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்: நடந்தது என்ன?

இதனால் அவர் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து அலறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கொஞ்சம் கூட பயப்படாமல் அங்கிருந்து குச்சியை எடித்து முதலையில் கண்ணில் குத்தியுள்ளார்.

இதனால் வலிதாங்காமல் பன்னே சிங்கின் காலை முதலை விடுத்து அங்கிருந்து ஓடியது. பிறகு உடனே தனது கணவனைக் கரைக்கு இழுத்து வந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளார்.

இது குறித்துக் கூறிய விமல் பாய், "தனது கணவரை முதலை கடித்தபோது, எனது வாழ்க்கையைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன்" என தெரிவித்துள்ளார்.

தற்போது முதலையிடம் இருந்து கணவனை மனைவி காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மனைவி விமல் பாய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories