இந்தியா

காதலிக்க வற்புறுத்தியவருக்கு மிரட்டல் விடுத்த சிறுமி.. விரக்தியில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி !

காதலிக்க வற்புறுத்திய 17 வயது இளைஞருக்கு சிறுமி மிரட்டல் விடுத்த நிலையில், இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க வற்புறுத்தியவருக்கு  மிரட்டல் விடுத்த சிறுமி.. விரக்தியில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்கு செல்லாமல் லாரி ஒன்றில் கிளீனராக பணியில் சேர்ந்துள்ளார்.

இவரின் தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில், தற்போது தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரின் காதலை அந்த சிறுமி ஏற்காமல் இருந்துள்ளார்.

காதலிக்க வற்புறுத்தியவருக்கு  மிரட்டல் விடுத்த சிறுமி.. விரக்தியில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி !

பலமுறை பின்தொடர்ந்து சென்றபோதும், வற்புறுத்திய நிலையிலும் சிறுமி இவரின் காதலை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகர் அந்த சிறுமியை சந்தித்து என்னை காதலித்து, உடனே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் மனோகரின் கோரிக்கையை கண்டுகொள்ளாத சிறுமி இதற்கு மேல் இதேபோன்று என் பின்னால் வந்து தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தால் எனது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று கூறி அந்த சிறுமி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனோகர் கடும் மனஉளைச்சல் அடைந்துள்ளார்.

காதலிக்க வற்புறுத்தியவருக்கு  மிரட்டல் விடுத்த சிறுமி.. விரக்தியில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி !

ஒருகட்டத்தில் இந்த சோகம் காரணமாக தான் வேலை செய்து வந்த லாரியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்ற்னர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”.

banner

Related Stories

Related Stories