இந்தியா

கொல்கத்தா: நவராத்திரிக்குள் நரபலி கொடுக்கனும்.. போலி மந்திரவாதியால் சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்

குழந்தை பேறு வேண்டி, பக்கத்து வீட்டுக்காரரே சிறுமியை கடத்தி நரபலி கொடுத்துள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா: நவராத்திரிக்குள் நரபலி கொடுக்கனும்.. போலி மந்திரவாதியால் சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஸ்ரீதர் ராய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கே 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளார். அவரை அவரது பெற்றோர் தேடிய நிலையில், எங்கும் கிடைக்கவில்லை.

இதனால் பெரும் பதற்றமடைந்த அவர்கள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர சோதனை நடத்தினர். அதோடு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிறுமி 2-வது மாடியில் இருக்கும் நபர் ஒருவரது வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.

கொல்கத்தா: நவராத்திரிக்குள் நரபலி கொடுக்கனும்.. போலி மந்திரவாதியால் சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்

இதையடுத்து அங்கு சென்று அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிறுமி சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அந்த வீட்டின் நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த அலோக் குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசரக்கையில் அந்த சிறுமி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்து வந்தார்.

இதையடுத்து தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், அலோக் குமாருக்கு திருமணமாகி நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பல டாக்டர்கள் கோயில்கள் என்று அழைத்துள்ளார்.

கொல்கத்தா: நவராத்திரிக்குள் நரபலி கொடுக்கனும்.. போலி மந்திரவாதியால் சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்

இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என்பதால், ஒரு சூனியம் வைக்கும் மாந்திரீகவாதியை அணுகியுள்ளார். அந்த நபரோ நவராத்திரிக்குள் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார். அதன்பேரில் முதலில் பயந்து இருந்த அலோக் குமார், பின்னர் குழந்தையை நரபலி கொடுக்க எண்ணியுள்ளார்.

கொல்கத்தா: நவராத்திரிக்குள் நரபலி கொடுக்கனும்.. போலி மந்திரவாதியால் சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்

எனவே சம்பவத்தன்று சிறுமியை கடத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அந்த உடலை ஒரு சாக்குமூட்டைக்குள் அடைத்து வைத்துள்ளார். அலோக் குமாரின் இந்த அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அந்த போலி மாந்திரீகரை தேடி வருகின்றனர். தொடர்ந்து சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு நடைபெற்ற சோதனையில் சிறுமியின் உடல் மற்றும் பிறப்புறுப்பில் பல காயங்கள் இருந்தது தெரியவந்தது. குழந்தை பேறு வேண்டி, பக்கத்து வீட்டுக்காரரே சிறுமியை கடத்தி நரபலி கொடுத்துள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories