இந்தியா

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால், தனது இன்னொரு மகனையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தாயால் கேரளாவில் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக பெண்கள் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வழக்கம். இவ்வாறு தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் இதனை பரிந்துரை செய்கின்றனர்.

இதனால் குழந்தைக்கு அதன் தாய் பல மாதங்கள் ஆண்டுகள் என தாய்ப்பாலை கொடுத்து வருகின்றனர். சிலருக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் மூலம் கொடுக்கப்படும் பாலை வாங்கி குழந்தைக்கு கொடுப்பர். இப்படி தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைக்கு கவனத்துடன் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்குவர்.

அப்படி கவனத்துடன் கொடுக்கவில்லை என்றால், குழந்தைக்கு எந்த சிக்கல் வேண்டுமானாலும் நேரலாம். அப்படி தான் இப்போது கேரளாவில் தாய்ப்பால் குழந்தையின் தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை அடுத்துள்ள உப்புத்துறை என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிசா. இவர் அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், இவருக்கு 7 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இதையடுத்து லிசா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் கருவுற்றிருந்தார்.

இவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வழக்கம்போல் இவர் தாய்ப்பால் கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னரும் இவர் தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தை திடீரென மூச்சு வாங்கத் தொடங்கியது. இதனால் பதறிப்போன தாய், உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

தாய்ப்பால் கொடுக்கும்போது பிறந்து சில நாட்களே ஆன தனது குழந்தை உயிரிழந்ததால் லிசா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதோடு குழந்தை தன்னால்தான் இறந்து போனதாக லிசா தன்னைத் தானே குற்றம் சுமத்திகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை இறந்த மறுநாளே காலையில் தனது 7 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பம் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

இது இங்கு மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளில் முன்னதாக பலமுறை நடந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இலங்கையில் உள்ள பொகவந்தலா என்ற பகுதியில் பிறந்து 13 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் தொண்டையில் தாய்ப்பால் சிக்கி உயிரிழந்தது.

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

கடந்த 2018-ல் புதுச்சேரியில் 2 மாத குழந்தையின் தொண்டையில் தாய்ப்பால் சிக்கி உயிரிழந்தது. மேலும் கடந்த ஆண்டு (2022) அக்டோபரில் இதே கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் 4 மாத குழந்தையும், நவம்பர் மாதம் முவாட்டுப்புழா என்ற பகுதியில் 11 மாத குழந்தையும் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்ப்பால் குடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து தொடரும் உயிர்பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories