இந்தியா

பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா? -உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா இல்லையா என்பது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா? -உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கோவாவில் வசித்து வரும் தம்பதிக்கு நன்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருக்கின்றனர். இதில் அனைவர்க்கும் திருமணம் நிகழ்ந்த நிலையில், தந்தை இறந்த பின்னர் குடும்பத்திற்குச் சொந்தமான கடை சகோதரிகளுக்கு தெரியாமல் சகோதரர் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், சகோதரிகளுக்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சகோதரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நான்கு சகோதரிகளுக்கும் திருமணத்தின் போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்டது. அதோடு சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினர். அதன் படி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா? -உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

அதன்பின்னர் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையிலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பத்திரத்தை மாற்றி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் கூட, பெண்ணுக்குச் அது தெரிந்த 6 வாரத்துக்குள் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எனவே, இதைக் காரணமாகச் சொல்லி கீழமை நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது தவறு. அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால். அனைவரது சம்மதத்திற்கு பிறகே சொத்துகளைக் குறிப்பிட்ட ஒருவருக்கு தரமுடியும். தாயார் பிற பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் சொத்தை குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு கொடுத்தது தவறு. இதுபோன்ற ஆவணங்களாக இல்லாமல் சொத்து பகிர்வு நடந்துள்ளதால் சொத்து பகிர்வை ஏற்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்

பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா? -உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

மேலும், இந்த வழக்கில் பெண்களுக்கு வரதட்சணை வழங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, மகள்களுக்கு வரதட்சணை வழங்கப்பட்டதாகவே இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு குடும்பச் சொத்தில் மகள்களுக்கு எப்போதும் உரிமை இருக்கிறது என்றும் தனது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories