இந்தியா

20 தூக்க மாத்திரைகளை கொடுத்து கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற 5வது மனைவி: விசாரணையில் போலிஸ் ஷாக்!

மத்திய பிரதேசத்தில் கணவனைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவியை போலிஸார் கைது செய்தனர்.

20 தூக்க மாத்திரைகளை கொடுத்து கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற 5வது மனைவி: விசாரணையில் போலிஸ் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் பிறப்புறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்றை போலிஸார் கண்டெடுத்தனர். பின்னர் இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தது பிரேந்தர் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலிஸாருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை.

20 தூக்க மாத்திரைகளை கொடுத்து கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற 5வது மனைவி: விசாரணையில் போலிஸ் ஷாக்!

இதையடுத்து பிரேந்தர் குர்ஜார் மனைவி காஞ்சன் குர்ஜாரின் நடவடிக்கை போலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறகு அவரை கண்காணித்தபோது அவர்தான் தனது கணவனைக் கொலை செய்துள்ளார் என்பதை போலிஸார் உறுதி செய்தனர்.பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேந்தர் குர்ஜாருக்கு ஏற்கனவே 4 திருமணங்கள் நடந்துள்ளது. இவருக்குக் குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் அனைவரும் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். இதையடுத்து பிரேந்தர் குர்ஜார் ஐந்தாவதாக காஞ்சன் குர்ஜாரை திருமணம் செய்துள்ளார். தினமும் குடித்துவிட்டு மனைவியைச் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கணவனைக் கொலை செய்ய மனைவி திட்டம் போட்டுள்ளார்.

20 தூக்க மாத்திரைகளை கொடுத்து கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற 5வது மனைவி: விசாரணையில் போலிஸ் ஷாக்!

அன்படி பிப்ரவரி 21ம் தேதி பாலில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கணவனுக்குக் கொடுத்துள்ளார். இதைக் குடித்து விட்டு பிரேந்தர் குர்ஜார் மயக்கமடைந்துள்ளார். பிறகு அவரை கோடாலியால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது பிறப்பு உறுப்பையும் அறுத்து எரிந்து, உடலைக் கிராமத்திற்கு வெளியே புதரில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனையே மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories