இந்தியா

70 ஆண்டுகளுக்கு பின்.. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக MLA ஆகும் பெண்: யார் இந்த ஹேக்கானி ஜக்காலு?

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக வெற்றி பெற்று ஹேக்கானி ஜக்காலு என்ற பெண் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்

70 ஆண்டுகளுக்கு பின்.. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக MLA ஆகும் பெண்: யார் இந்த ஹேக்கானி ஜக்காலு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா மாநிலத்தில் கடந்த 16ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் கடந்த 27ம் தேதியும் ஒரேகட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மூன்று மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில் திரிபுரா, நாகாலாந்து மாநிலத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைக்க உள்ளது. மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண் எம்.எல்.ஏ என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் ஹேக்கானி ஜக்காலு.

70 ஆண்டுகளுக்கு பின்.. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக MLA ஆகும் பெண்: யார் இந்த ஹேக்கானி ஜக்காலு?

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி பா.ஜ.க கூட்டணி 39 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி சார்பில் திமாபூர் தொகுதியில் போட்டியிட்ட ஹேக்கானி ஜக்காலு 1536 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நாகாலாந்து வரலாற்றிலேயே முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையை இவர் படைத்துள்ளார்.

70 ஆண்டுகளுக்கு பின்.. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக MLA ஆகும் பெண்: யார் இந்த ஹேக்கானி ஜக்காலு?

இந்த தேர்தலில் ஹேக்கானி ஜக்காலு, சல்ஹவுதுவோ க்ரூஸ், ஹிகாலி செமா, ரோஸிதாம்சன் ஆகிய நான்கு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். இவரின் இந்த வெற்றி நாகாலாந்து பெண்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஹேக்கானி ஜக்காலு?

47 வயதாகும் ஹேக்கானி ஜக்காலு 2013ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சாண் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

70 ஆண்டுகளுக்கு பின்.. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக MLA ஆகும் பெண்: யார் இந்த ஹேக்கானி ஜக்காலு?
Manojkumar

மேலும் சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவரிடம் நாரி சக்தி புரஸ்கார் விருதை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு யூத் நெட் என்ற அமைப்பைத் தொடங்கிக் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இளைஞர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பது, வாழ்க்கைக்கான திறன் பயிற்சிகளைக் கொடுப்பது போன்ற சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில்தான் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி சார்பில் திமாபூர் தொகுதியில் போட்டியிட்ட ஹேக்கானி ஜக்காலு முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories