இந்தியா

5 வயது சிறுவனை கடித்துக் குதறிய 3 தெரு நாய்கள்.. மனதை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ!

ஹைதராபாத்தில் 5 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 வயது சிறுவனை கடித்துக் குதறிய 3 தெரு நாய்கள்.. மனதை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரதீப், தனது தந்தை காவலாளியாக வேலைபார்த்து வரும் பகுதிக்கு தனியாக சாலையில் நடிந்து சென்றுள்ளான். அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மூன்று தெரு நாய்கள் சிறுவனை கீழே தள்ளி கடித்துள்ளது. நாய்களிடம் இருந்து சிறுவன் தப்பி செல்ல முயன்றபோதும் மூன்று தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு சிறுவனை விடாமல் கடித்து குதறியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி சிறுவனை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு படுகாயத்துடன் இருந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது சிறுவனை தெருநாய் கடிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி காண்போர் மனதை பதறவைத்து வருகிறது.

5 வயது சிறுவனை கடித்துக் குதறிய 3 தெரு நாய்கள்.. மனதை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ!

சமீபகாலமாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தெருநாய் கடுத்து பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் கூட தெருநாய் கடித்து 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் உத்தர பிரதேசத்தில் 7 வயது சிறுவனும், குஜராத்தில் 4 வயது சிறுவனும் தெரு நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். இப்படி இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடந்து வருவதை தடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories