இந்தியா

பெற்றோர்களே உஷார்..! வாஷிங் மிஷினுக்குள் இருந்த குழந்தை.. அறியாமல் துணிகளை துவைத்த தாய்.. என்ன நடந்தது ?

வாஷிங் மிஷினுக்குள் குழந்தை இருப்பதாய் அறியாத தாய், அதனுடன் சேர்ந்து துணிகளை துவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே உஷார்..! வாஷிங் மிஷினுக்குள் இருந்த குழந்தை.. அறியாமல் துணிகளை துவைத்த தாய்.. என்ன நடந்தது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடுவது உண்டு. அதே போல் தவழும் குழந்தைகளும், வீட்டுக்குள்ளேயே மூளை முடுக்கு எல்லாம் தவழ்ந்து விளையாடும். அவ்வாறு விளையாடும் குழந்தை கையில் கிடைக்கும் பாத்திரத்தில் தங்கள் தலையை சொருகிவிடுவது; பாட்டிலுக்குள் கையை விட்டு மாட்டிக்கொள்வது; பீரோ, பெட்டிக்குள் போய் ஒளிந்துகொள்வது என்றெல்லாம் நடக்கும்.

தற்போது இதே போல் ஒரு குழந்தை துவைக்கும் வாஷிங் மிஷினுக்குள் தவறுதலாக போயுள்ளது. அதனை கவனிக்காத தாய், அதனுள் துணிகளை போட்டு சோப்பு பொடியெல்லாம் போட்டு துவைத்துள்ளார். பின்னர் குழந்தையை காணவில்லை என்று பதற்றத்துடன் தேடி அழைத்து கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெற்றோர்களே உஷார்..! வாஷிங் மிஷினுக்குள் இருந்த குழந்தை.. அறியாமல் துணிகளை துவைத்த தாய்.. என்ன நடந்தது ?

டெல்லி வசந்த்கன்ஞ் பகுதியில் தம்பதி ஒருவர் தங்கள் ஒன்றரை வயது ஆண் குழந்தையோடு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய், வழக்கம்போல் தங்கள் துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு விட்டு தனது வேலையை பார்த்துள்ளார். மேலும் அவர் மிஷினில் உள்ள மூடியை மூடாமல் வந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் தனது குழந்தையை காணவில்லை என்று வீடு முழுக்க தேடியுள்ளார். அப்போது எதேர்ச்சியாக மிஷினுக்குள் பார்க்கும்போது, அந்த குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பியிருந்த துணிகளுக்கு மத்தியில் மிஷினுக்குள் கிடந்துள்ளது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக தனது குழந்தையை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பெற்றோர்களே உஷார்..! வாஷிங் மிஷினுக்குள் இருந்த குழந்தை.. அறியாமல் துணிகளை துவைத்த தாய்.. என்ன நடந்தது ?

மருத்துவர்கள் அங்கே குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் குழந்தை மயக்க நிலையில் இருந்து மீளவே இல்லை. பின்னர் தொடர் மருத்துவர்களின் தொடர் முயற்சியால் சுமார் 7 நாட்களுக்கு பிறகு குழந்தை கண் விழித்தது. ஒரு வார காலமாக குழந்தை கோமா நிலையில் இருந்துள்ளது.

இருப்பினும் குழந்தைக்கு உடல் உள் பகுதி எதுவும் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். குறிப்பாக குழந்தையில் மூளையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்றும் தொடர்ச்சியாக சோதனை செய்தனர். தற்போது சுமார் 19 நாட்கள் கழித்து குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பெற்றோர்களே உஷார்..! வாஷிங் மிஷினுக்குள் இருந்த குழந்தை.. அறியாமல் துணிகளை துவைத்த தாய்.. என்ன நடந்தது ?

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கூறும்போது, "குழந்தை ஒரு வேலை நாற்காலியில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்திருக்கலாம். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வீடு முழுவதும் தேடிய பிறகே சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மிஷினுக்குள் கிடந்தது தெரியவந்தது. குழந்தையை உடனே தூக்கினேன். ஆனால் அது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது.

பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். எனது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு நான் வந்த போது, ​​சுயநினைவின்றி, குளிர்ச்சியாக, சுவாசிப்பதில் சிரமத்துடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது எனது குழந்தை நலமுடன் இருக்கிறார்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

banner

Related Stories

Related Stories