இந்தியா

அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேச மறுப்பது ஏன்? : திருச்சி சிவா MP சரமாரி கேள்வி!

அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேச மறுப்பது ஏன்? என தி.மு.க எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேச மறுப்பது ஏன்? : திருச்சி சிவா MP சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றிக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா பேசுகையில், " பெட்ரோலிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 11 லட்சம் கோடி வங்கிக் கடன் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினந்தோறும் 15 விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 5000 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் நிலை நாட்டில் மிக மோசமாக உள்ளது.

அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேச மறுப்பது ஏன்? : திருச்சி சிவா MP சரமாரி கேள்வி!

நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. இவை ஏழை, நடுத்தர மக்களைதான் கடுமையாகப் பாதிக்கிறது. அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடே பேசும் போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மட்டும் பேச மறுப்பது ஏன்?. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் பாதுகாப்பதில்தான் ஒன்றிய அரசு குறியாக இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் விருப்பம் இல்லை.

அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பேச மறுப்பது ஏன்? : திருச்சி சிவா MP சரமாரி கேள்வி!

பொதுத்துறை நிறுவனமான சி.இ.எல் ரூ. 730 கோடி லாபம் சம்பாதிக்கும் நிறுவனம். அதனை ரூ.250 கோடிக்கு ஒன்றிய அரசு விற்றுள்ளது. அதன் சொத்துமதிப்பு மட்டும் ரூ.1700 கோடி. விடியோகான் நிறுவன மோசடியால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது வங்கிகள்தான். தனியாருக்குச் சலுகை காட்டுவதும், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தை விற்பதும்தான் அரசின் வேலையாக உள்ளது. ஒன்றிய அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories