இந்தியா

'நான் உங்கள் விருந்தாளி'.. இனிப்பு கடையில் கொள்ளை: உரிமையாளருக்கு கடிதம் எழுதிச் சென்ற திருடன்!

ராஜஸ்தானில் கடைக்குள் புகுந்து திருடிவிட்டு திருடன் ஒருவன் 2 பக்கத்திற்கு உரிமையாளருக்குக் கடிதம் எழுதிவைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நான் உங்கள் விருந்தாளி'..  இனிப்பு கடையில் கொள்ளை: உரிமையாளருக்கு  கடிதம் எழுதிச் சென்ற திருடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோமாராம். இவர் பனியானா பகுதியில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜனவரி 24ம் தேதி வழக்கம் போல் காலை கடையைத் திறந்துள்ளார்.

அப்போது, கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி இருந்துள்ளது. இதைப்பார்த்த கோமாராம் அதிர்ச்சியடைந்து கல்லாப் பெட்டியில் பணம் இருக்கிறதா? என திறந்து பார்த்துள்ளார். இதில் பணம் இல்லாததைக் கண்டு மீண்டும் அதிர்ச்சியடைந்து கடையில் எப்படித் கொள்ளை சம்பவம் நடந்தது என சோதனை செய்துள்ளார்.

'நான் உங்கள் விருந்தாளி'..  இனிப்பு கடையில் கொள்ளை: உரிமையாளருக்கு  கடிதம் எழுதிச் சென்ற திருடன்!

அப்போது கடைக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்ற திருடன் எழுதிவைத்துவிட்டுச் சென்ற 2 பக்கத்திற்கான கடிதம் ஒன்று அவருக்குக் கிடைத்துள்ளது. அதில், "நான் நல்ல மனசு கொண்டவன். நான் உங்கள் கடைக்குத் திருடுவதற்காக நுழையவில்லை.

நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. அதிகமாகப் பசி எடுத்தால் சாப்பிடத்தான் உங்கள் கடைக்குள் நுழைந்தேன். பணம் திருட வரவில்லை. ஆனால் எனது காதலி அடிபட்டுள்ளதால் உங்கள் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டேன்.

'நான் உங்கள் விருந்தாளி'..  இனிப்பு கடையில் கொள்ளை: உரிமையாளருக்கு  கடிதம் எழுதிச் சென்ற திருடன்!

உங்கள் கடையில் கொஞ்சம் இனிப்புகளைத்தான் சாப்பிட்டேன். சேவ் எனக்கு பிடிக்கும். அனால் கடையில் சேவ் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நான் உங்கள் விருந்தாளி. நீங்கள் கோலிஸாரிடம் புகார் கூறவேண்டாம்" என இருந்துள்ளது.

இந்த கடிதத்தைப் படித்த பிறகு கோமாராம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் கடிதம் எழுதி விட்டு சென்ற திருடன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இனிப்புக்கடைக்குள் புகுந்த திருடன் ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் இனிப்புகளைத் திருடிச்சென்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories