சினிமா

இந்த வாரம்.. ஒரே நாளில் தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

இந்த வாரம் தியேட்டர் ரிலீஸுக்காக 7 படங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த படங்களின் பட்டியலை இதில் காண்போம்..

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துவர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் 2 பெரிய நடிகர்களின் படங்கள் வாரிசு - துணிவு நேரடியாக மோதியது. இதில் பொங்கல் வின்னர் யார் என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டு வருகின்றனர்.

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

கடந்த 11-ம் தேதி வெளியான இந்த இரு படங்களானது தற்போது வரை வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இரு படங்களின் வெளியீட்டால் சிறிது நாட்கள் வரை திரையரங்குகளில் வேறு எந்த படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதே போல், பல படங்கள் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்தனர். அதோடு இது வெளியாகி 20 நாட்களுக்கு பிறகுதான் திரையரங்கில் படங்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியானது.

அந்த வகையில் தற்போது கடந்த 25-ம் தேதி ஷாருக் நடிப்பில் 'பதான்' படம் வெளியானது. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த வாரம் திரையரங்கில் சுமார் 7 படங்கள் வெளியீட்டுக்காக தயார் நிலையில் உள்ளது. அந்த பட்டியல் இதோ : -

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

மைக்கேல் (Michael) - சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா கெளஷிகே, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகிவுள்ளது.

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

ரன் பேபி ரன் (Run Baby Run) - இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

பொம்மை நாயகி (Bommai Nayagi) - இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு, பேபி ஸ்ரீமதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

தி கிரேட் இந்தியன் கிட்சன் (The Great Indian Kitchen) - மலையாள மொழியில் ஹிட் கொடுத்த இப்படத்தை தமிழில் ஆர்.கண்ணன் இயக்குக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

நான் கடவுள் இல்லை (Naan Kadavul Illai) - சில வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குநரும், நடிகரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள படம்தான் 'நான் கடவுள் இல்லை'. சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த வாரம்.. ஒரே நாளில்
தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருக்கும் அந்த 6 தமிழ் படங்கள் என்னென்ன? -பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

தலைக்கூத்தல் (Thalaikoothal) - சமுத்திரக்கனி, கதிர் வசுந்தரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். முன்னதாக ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் 'லென்ஸ்' படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories