இந்தியா

"நேதாஜிக்கும் - BJP,RSSக்கும் எந்த சம்பந்தமும் இல்லை": மகள் அனிதா போஸ் பாஃப் கூறியது என்ன?

RSS சித்தாந்தமும் நேதாஜியின் சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் என நேதாஜி மகள் அனிதா போஸ் பாஃப் தெரிவித்துள்ளார்.

"நேதாஜிக்கும் - BJP,RSSக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை": மகள் அனிதா போஸ் பாஃப் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் எதிர்த்தவர் மகாத்மா காந்தி. ஆனால் ஆயுதம் ஏந்தி துணிச்சலாக எதிர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய ராணுவப் படையையே திரட்டியவர். இவரின் இந்த படையில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினர்.

இந்நிலையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

"நேதாஜிக்கும் - BJP,RSSக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை": மகள் அனிதா போஸ் பாஃப் கூறியது என்ன?

கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.ஸ் அமைப்புகள் தொடர்ந்து நேதாஜியை முன்னிலைப்படுத்தி பேசி வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் RSS சித்தாந்தமும் நேதாஜியின் சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் என நேதாஜி மகள் அனிதா போஸ் பாஃப் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள நேதாஜியின் மகள் அனிதா போஸ் பாஃப், "என்னுடைய தந்தை ஓர் இடதுசாரி. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் மற்றும் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழும் மதச்சார்பற்ற நாடுதான் சுதந்திர இந்தியா என்ற இலட்சியங்களைக் கொண்டவர் எனது தந்தை.

"நேதாஜிக்கும் - BJP,RSSக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை": மகள் அனிதா போஸ் பாஃப் கூறியது என்ன?

ஆனால் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.ஸ் அமைப்புகள் அதைப் பிரதிபலிக்கவில்லை. இதனால் அவர்கள் நேதாஜியைக் கொண்டாடவேண்டிய அவசியம் இல்லை. இன்று நேதாஜி இருந்திருத்தால் அவரை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொண்டாடி இருக்காது.

நேதாஜியை இன்று ஆண்களும், பெண்களும் அவரது மதிப்புகளை நிலைநிறுத்துகின்றனர். இந்தியாவில் அவரது அஸ்தியைக் கொண்டுவருவதுதான் அவரை சிறந்த முறையில் கவுரவிக்க முடியும். நேதாஜியின் அஸ்தியை வீட்டிற்கு கொண்டு வருவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories