இந்தியா

70 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பாரம்பரியம்.. இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது ?

குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும் இந்த ராஜ்பாத் பாதை சுமார் 8 கி.மீட்டர் தூரத்தை கொண்டிருக்கும்.

70 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பாரம்பரியம்.. இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த குடியரசு தின விழாவின் போது புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியாவின் மூவர்ண தேசியக் கோடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். இதனைக் காண பல்வேறு மாநிலங்களிலில் இருந்து மக்கள் படையெடுத்துச் செல்வார்கள்.

பலரும் இன்றைய குடியரசு தினம் எங்கு நடைபெறும் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தின நிகழ்ச்சிகள் எங்கு கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு என பலவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தவகையில், இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்று நிகழ்வை கொண்டு சேர்ப்பதே இந்த செய்தி தொகுப்பு..

70 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பாரம்பரியம்.. இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது ?

இந்தியாவின் முதல் குடியரசு தின நிகழ்ச்சி தற்போது நடைபெறும் ராஜ்பாத்-தில் நடைபெற்றவில்லை. 1950ம் ஆண்டு முதல் குடியரசு தின அணிவகுப்பு டெல்லி இர்வின் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது அந்த விளையாட்டு அரங்கைச் சுற்றியும் தடுப்புச் சுவர் இருந்ததால் அதன் பின்னால் இருந்த பழைய கோட்டையும் தெளிவாக தெரிந்தது.

குறிப்பாக, 1950 முதல் 1954 வரையில் குடியரசு தின நிகழ்ச்சி, இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே கேம்ப், செங்கோட்டை மற்றும் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றன. பின்னர் 1955ம் ஆண்டு ராஜ்பாத்தில் நடைபெற தொடங்கி இன்று வரை அதேபகுதியிலேயே நடைபெற்று வருகிறது.

70 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பாரம்பரியம்.. இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது ?

குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும் இந்த ராஜ்பாத் பாதை சுமார் 8 கி.மீட்டர் தூரத்தை கொண்டிருக்கும். அதாவது குடியரசு தலைவர் மாளிகையில் ரெய்ஸ்னா ஹில் பகுதியில் தொடங்கி ராஜ்பாத், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை இந்த பாதையில் நிகழ்ச்சி முடிவடையும்.

1950 ஜனவரி 26ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி, இந்தியாவை இறையான்மை கொண்ட ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்தார். பின்னர் அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.

70 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பாரம்பரியம்.. இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது ?

பின்னர் இன்றைய ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் பதவி ஏற்பு முடிந்த பிறகு ராஜேந்திர பிரசாதுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு இர்வின் மைதானத்திற்கு வந்து, பின்னர் மூவர்ணக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதயை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர். இந்தப் பாரம்பரியம் தான் 73 ஆண்டுகளிலும் தொடர்கிறது.

முதல் நிகழ்வில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மேலும் அந்த அணிகுப்பில் முப்படை வீரர்களும் கலந்துக்கொண்டனர்.

முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட அன்று முதன்முதலில் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது.

70 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பாரம்பரியம்.. இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது ?

பின்னர் 1951ல் துணிச்சலான நான்கு வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா பதக்கம் வழங்கப்பட்டது.

1953ல் நாட்டுப்புற நடனம் மற்றும் வான வேடிக்கை போன்றவை அணி வகுப்பில் இடம்பெற்றது. அதே ஆண்டில்தான் முதல் முறையாக திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்றனர்.

1955 ல் முஷாயிரா பாரம்பரியம் என்ற பாடல் இசைக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.

1956ல் முதல் முறையாக அலங்கரிக்கப்பட்ட 5 யானைகள் பங்கேற்றன.

1958ல் முதல் முறையாக தலைநகரில் உள்ள அரசு கட்டங்களில் மின் விளக்குகள் அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

1959ல் விமானப்படை மூலம் ஹெலிகாப்டரில் இருந்து மலர் மழை பொழியப்பட்டது. இப்படி சில கலைநிகழ்ச்சி, வீரர்களுக்கு மரியாதை, பதக்கம் வழங்கி பெருமைப்படுத்துதல் என தொடங்கிய நிகழ்வு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories