இந்தியா

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

மூவர்ணக் கொடியின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமங்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது நமது தலையாய கடமையாகும்.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியா தனது 73வது குடியரசுத் தினத்தை கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இந்திய குடியரசு தலைவர் ஏற்றுவார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தேசியக் கொடியேற்றும் நிகழ்வு கொண்டாடப்படும் குடியரசு தின நாளில், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமங்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது நமது தலையாய கடமையாகும்.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

இந்திய தேசியக்கொடியின் வரலாற்றைப் பார்ப்போம்..

இந்திய தேசியக் கொடியின் தற்போதைய வடிவமைப்பு, பல கட்டங்களில் பல வடிங்களில் இருந்து, ஒவ்வொரு முறையும் மெருகூட்டப்பட்டவையாகும். இந்தியாவின் முதல் தேசியக் கொடியை நிவேதிகா என்பவர் 1904ம் ஆண்டு முதன் முதலில் வடிவமைத்தார். அந்தக்கொடி சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன் கொடியின் நடுப்பகுதியில் வஜ்ரா மற்றும் பக்கங்களில் வந்தே மாதரம் என்ற வார்த்தையும் இடம் பெற்றிருக்கும்.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

பின்னர் 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கம் என்ற பகுதியில் முதன்முதலாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அந்த தேசியக் கொடியில், நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என்ற மூன்று வண்ணங்கள், மூன்று பட்டைகளாக இருந்தன.

மேலும் இந்தியாவின் எட்டு மாகாணங்களைக் குறிக்கும் வகையில் 8 நட்சத்திரங்கள் அமைந்திருந்தது. இதில் மஞ்சள் நிறப்பட்டையில் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையும், சிவப்பு நிறப்பட்டையில் சூரியன், பிறை நிலவு மற்றும் நட்சத்திரமும் இடம்பெற்றிருந்தன.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

அதன்பிறகு அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் தேசியக் கொடியின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. அதனால் 1917ம் ஆண்டில் யூனியன் ஜாக், ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை பட்டைகளுடன், ஏழு நட்சத்திரங்கள் மற்றும் கூடுதலாக ஒரு நட்சத்திரத்துடன் இருக்கும். அதில் ஒரு பிறை நிலவு வடிவத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த கொடியை அன்னி பெசன்ட் அம்மையார் மற்றும் லோகமான்ய திலக் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

அதன்பின்னர் 1921ம் ஆண்டு பிங்கலி வெங்கையா என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்வராஜ் கொடியை வடிவமைத்தார். அந்த கொடியில், முதல் இருக்கும் மேற்புறப்பட்டை வெள்ளை நிறத்திலும், நடுப்பகுதியில் இருக்கும் பட்டை பச்சை நிறத்திலும், கீழ் பட்டை சிவப்பு நிறத்திலும் கொடியின் நடுப்பகுதியில் நூற்பு சக்கரமும் இடம்பெற்றிருந்தது. இந்த கொடி ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியா சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

அடுத்த பத்து ஆண்டுக்கு பின்னர் 1931ம் ஆண்டு, கொடியின் வண்ணங்களில் சிவப்பு குங்கும வண்ணத்தில் மேல்பட்டையிலும், வெள்ளைப்பட்டை நடுவிலும் பச்சை பட்டை கீலேயும் இடம் பெற்றிருந்தது. கொடியின் நடுப்பகுதியில் நூற்பு சக்கரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

இறுதியாக இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1947ம் ஆண்டில் வெள்ளை பட்டை நடுவில் மாற்றப்பட்டு, பச்சை பட்டை கீழேயும் மேலே முதல் வரிசையில் சிவப்பு நிறம் காவியாக மாறியது. நடுவில் அசோக சக்கரமாக மாற்றப்பட்டது. இன்று நம் கொடியிலிருக்கும் அசோகச் சக்கரம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரையா தியாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணியால் வடிவமைக்கப்பட்டது. இன்றுவரை இந்த மூவர்ணக்கொடியே நடைமுறையில் உள்ளது.

“குடியரசு தினத்தில் செங்கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி” - இந்தியத் தேசியக் கொடியின் வரலாறு தெரியுமா ?

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம் - உயரம் விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories