இந்தியா

கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !

காதலனுடன் சேர்ந்து கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் வெங்கையா (வயது 40). இவரது மனைவி முகுந்தா (வயது 34). இவர்களது பக்கத்து வீட்டில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உதய்சாய் (வயது 35) என்பவர் தனது மனைவி உஷாவுடன் ( வயது 30) குடிவந்துள்ளார்.

இதில் வெங்கையா வேலை செய்த பட்டறை தொழிற்சாலையிலேயே உதய்சாயும் வேலை செய்ததால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும், இருவரின் குடும்பத்தாரும் ஒருவர் மற்றொருவர் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் அளவு நெருக்கமாக இருந்துள்ளனர்.

கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !

இந்த தருணத்தில் உதய்சாய்க்கும் வெங்கையாவின் மனைவி முகுந்தாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் முகுந்தாவின் கணவர் வெங்கையாவுக்கு தெரிய வந்த நிலையில், அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் வெங்கையாவை கொலை செய்ய உதய்சாயும் முகுந்தாவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக புத்தாண்டு அன்று உதய்சாய் வெங்கையாவை அழைத்து மது விருந்து வைப்பதாக அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அந்த பகுதியில் உள்ள தெலுங்கு கங்கை கால்வாய் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !

அங்கு சென்றதும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த மதுபானத்தை வெங்கையாவுக்கு குடிக்க கொடுத்துள்ளனர். அதை குடித்ததும் வெங்கையா மயங்கியுள்ளார். பின்னர் அந்த இடத்துக்கு சொன்னபடி முகுந்தா வர அவரும் உதய்சாயும் இணைந்து வெங்கையாவை கால்வாய் நீரில் முக்கி கொலை செய்து சடலத்தை அங்கேயே விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

சடலம் கிடப்பது குறித்து போலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அங்கு வந்து போலிஸார் சோதனை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் இருந்தவர்களின் கூறிய தகவலின் அடிப்படையில் வெங்கையாவின் மனைவி முகுந்தாவிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொலை சம்பவர் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முகுந்தாவையும் உதய்சாயையும் போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories