இந்தியா

“மாதம் ஒரு கோடி தருகிறோம்.. ” : பா.ஜ.க அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டில் பெண் பயிற்சியாளர் ‘பகீர்’ தகவல்!

ஹரியானா பா.ஜ.க அமைச்சர் சந்தீப் சிங், தனது பாலியல் குற்றத்தை மூடிமறைக்க ரூ. 1 கோடி தருவதாகவும், நாட்டை விட்டே ஓடிவிடுமாறும் கூறி மிரட்டுகிறார் என பெண் பயிற்சியாளர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

“மாதம் ஒரு கோடி தருகிறோம்.. ” : பா.ஜ.க அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டில் பெண் பயிற்சியாளர் ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக பா.ஜ.க மாநில தலைமையிடம் மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாது, உ.பி, குஜராத் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில், பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரின் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கிறது.

இந்நிலையில், ஹரியானா பா.ஜ.க அமைச்சர் சந்தீப் சிங், தனது பாலியல் குற்றத்தை மூடிமறைக்க ரூ. 1 கோடி தருவதாகவும், நாட்டை விட்டே ஓடிவிடுமாறும் கூறி மிரட்டுகிறார் என பெண் பயிற்சியாளர் பகீர் தகவலை தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மாதம் ஒரு கோடி தருகிறோம்.. ” : பா.ஜ.க அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டில் பெண் பயிற்சியாளர் ‘பகீர்’ தகவல்!

ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங். இவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தேசிய அளவிலான முன்னாள் வீராங்கனையும், தற்போதைய ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளருமான ஒருவர் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புகார் அளித்தார்.

இது நாடு தழுவிய விவாதமானது. அமைச்சருக்கு எதிரான கண்டனங்களையும் குவித்தது. பிரச்சனை முற்றியதால், சந்தீப் சிங் ஜனவரி 2-ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்து தற்போது வரை ஹரியானா போலிஸார் அவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்த பெண் பயிற்சியாளரின் வழக்கறிஞர் திபன்ஷு பன்சால், “சந்தீப் சிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் 5 பிரிவுகளின் கீழ் அவர் இந்நேரம் கைது செய் யப்பட்டிருக்க வேண்டும். காவல்துறையினர் சந்தீப் சிங்கைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவரது வீட்டிற்கு வெளியே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

“மாதம் ஒரு கோடி தருகிறோம்.. ” : பா.ஜ.க அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டில் பெண் பயிற்சியாளர் ‘பகீர்’ தகவல்!

இதற்கிடையே, அமைச்சர் சந்தீப் சிங் தரப்பிலிருந்து ரூ. 1 கோடி தருவதாக பேரம் பேசுவதாகவும், வெளிநாட்டுக்கு ஓடி விட வேண்டும் என்று மிரட்டல் வருவதாகவும் பெண் பயிற்சியாளர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும் பெண் பயிற்சியாளர், இந்த சம்பவத்தில் முழு விவரங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்திருக்கும் நிலையில், தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நீ எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போய்விடு; மாதம் ஒரு கோடி ரூபாய் தருகிறோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories