தமிழ்நாடு

ஓசியில் உணவு கேட்டு கொதிக்கும் எண்ணெய்யை கடைக்காரர் மீது ஊற்றிய கொடூரம் - 5 பேரை சிறையில் அடைத்த போலிஸ்!

தாம்பரம் அருகே உணவகத்தில் ஓசியில் ப்ரைட் ரைஸ் கேட்டு கொதிக்கும் எண்ணையை மேலே ஊற்றி உணவகத்தை சூறையாடிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஓசியில் உணவு கேட்டு கொதிக்கும் எண்ணெய்யை கடைக்காரர் மீது ஊற்றிய கொடூரம் - 5 பேரை சிறையில் அடைத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (59). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு மதுபோதையில், கடைக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த அஜித் மற்றும் ஹரிஹரன் ஓசியில் ப்ரைட் ரைஸ் கேட்டு வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர்.

அதற்கு தரமுடியாது என்று ஜெயமணி கூறியதால், உன்னை என்ன செய்கிறோம் என்றுபார் என்று கூறி சென்றவர்கள் அரை மணி நேரம் கழித்து தங்களின் நண்பர்களுடன் வந்த விக்னேஷ் மற்றும் அஜித், ஜெயமணி மற்றும் அவரது மகன் மணிகண்டன் உடன் வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு திடிரென கடாயில் சூடாக இருந்த எண்ணையை மேலே ஊற்றி விட்டு கடையில் இருந்த பொருடக்ளை அடித்து நொறுக்கி தப்பி செறுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பலத்த காயமடைந்த ஜெயமணி மற்றும் லேசான காயமடைந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து சேலையூர் போலிஸாரிடம் புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ், அஜித், பிரவீன், சிவகுமார், ஹரிஹரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories