இந்தியா

“ஃபோனுக்கு நாங்க எங்க போறது..” டிஜிட்டல் வடிவில் மாறும் மகாத்மா காந்தி திட்டம்: விழிபிதுங்கும் முதியோர்!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஜனவரி 1-ந் தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஃபோனுக்கு நாங்க எங்க போறது..”  டிஜிட்டல் வடிவில் மாறும் மகாத்மா காந்தி திட்டம்: விழிபிதுங்கும் முதியோர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி, கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றிய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு ரூ. 214 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“ஃபோனுக்கு நாங்க எங்க போறது..”  டிஜிட்டல் வடிவில் மாறும் மகாத்மா காந்தி திட்டம்: விழிபிதுங்கும் முதியோர்!

அந்த அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மொபைல் செயலி (National Mobile Monitoring System App: NMMS) மூலம் இரண்டு நேர முத்திரையிடப்பட்ட மற்றும் ஜியோடேக் செய்யப்பட்ட புகைப்படங்களுடன் பணியிடத்தில் வருகையை பதிவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளர்கள் அனைவரும் தங்களின் வருகைப் பதிவை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருகைப் பதிவை டிஜிட்டல் மயாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

“ஃபோனுக்கு நாங்க எங்க போறது..”  டிஜிட்டல் வடிவில் மாறும் மகாத்மா காந்தி திட்டம்: விழிபிதுங்கும் முதியோர்!

தேசிய மொபைல் கண்காணிப்பு (National Mobile Monitoring System App: NMMS) முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த வருகை பதிவு இன்று (ஜனவரி 1-ம்) தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தில் கீழ் உள்ள பெரும்பாலானோர் குறைந்த படிப்பைமட்டுமே மேற்கொண்டுள்ளவர்களாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுபோல செல்போன் செயலி மூலம் வருகை பதிவை மேற்கொள்வது என கடினமானதாக இருக்கும் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories