இந்தியா

Veg Biryani-ல் கறி துண்டு.. பிரபல உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ்: நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் வெஜ் பிரியாணியில் கறி துண்டு இருந்ததால் உணவகத்தின் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் நடந்துள்ளது.

Veg Biryani-ல் கறி துண்டு..   பிரபல உணவகத்தின் மீது  வழக்கு பதிவு செய்த போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு ஆகாஷ் துபே என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர் ஆகாஷ துவே, உணவக ஊழியரிடம் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு சாப்பிட வெஜ் பிரியாணி கொடுக்கப்பட்டது.

Veg Biryani-ல் கறி துண்டு..   பிரபல உணவகத்தின் மீது  வழக்கு பதிவு செய்த போலிஸ்: நடந்தது என்ன?

இதைச்சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதில் எலும்புத் துண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இது எப்படியோ தவறுதலாக வந்து விட்டது என கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இருந்தாலும் ஆகாஸ் துபே இது குறித்து விஜய் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து உணவகத்தின் மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராட்டி என்பவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Veg Biryani-ல் கறி துண்டு..   பிரபல உணவகத்தின் மீது  வழக்கு பதிவு செய்த போலிஸ்: நடந்தது என்ன?

மேலும், "வெஜ் பிரியாணியில் எலும்பு கறி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை துணை ஆய்வாளர் சம்பத் உபாத்யாய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வைரலானதை அடுத்து வெஜ் பரியாணியில் கறி துண்டு இருந்ததற்கு எல்லாம் வழக்குப் பதிவா? என இணையத்தில் கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories