இந்தியா

ஏய் நகையை கொடு.. பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பெண்ணிடம் கொள்ளை: பாஜக ஆளும் மாநிலத்தில் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியைக் காட்டி பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏய் நகையை கொடு.. பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பெண்ணிடம் கொள்ளை: பாஜக ஆளும் மாநிலத்தில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்திற்குட்பட்டது கோகுல் தனம் பகுதி. இப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண்ணின் அருகே வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். பிறகு அணிந்திருந்த நகைகளைக் கழட்டி கொடுக்கும்படி மிரட்டியதால் அப்பெண் அச்சமடைந்துள்ளார்.

பிறகு அப்பெண் அணிந்திருந்த நகைகளைக் கழட்டி அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரையும் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனையும் மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உத்தர பிரதேச போலிஸார் ஒருவரை கூட கைது செய்யவில்லை.

ஏய் நகையை கொடு.. பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பெண்ணிடம் கொள்ளை: பாஜக ஆளும் மாநிலத்தில் அதிர்ச்சி!

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

banner

Related Stories

Related Stories