இந்தியா

பள்ளி மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசி, ஆபாச படங்களை காட்டிய ஆசிரியர் கைது: தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!

மாணவிகளிடம் முதலிரவு குறித்து கேள்வி எழுப்பியதுடன் ஆபாச படங்களை வகுப்பறையிலேயே காட்டிய ஆசிரியரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

பள்ளி மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசி, ஆபாச படங்களை காட்டிய ஆசிரியர் கைது: தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலத்தில் கோலார் தாலுகாவில் இருக்கும் அரசு பள்ளியில் நரசாபுர கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்.

அப்போது, முதல் இரவு என்றால் என்ன? என்று மாணவ மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். தாம்பத்தியம் குறித்தும் விளக்கிப் பேசி இருக்கிறார். மாணவ - மாணவிகளுக்கு அது தொடர்பான ஆபாச படங்களையும் காட்டி பேசி இருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.

பள்ளி மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசி, ஆபாச படங்களை காட்டிய ஆசிரியர் கைது: தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் பொதுமக்களும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர் பிரகாஷைப் பிடித்து அடித்து உதைத்திருக்கிறார்கள். பின்னர் ஆசிரியரின் செயல் குறித்து கோலார் தாலுகா வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் மாணவ மாணவியரிடம் அதிகாரி விசாரணை நடத்தி வகுப்பறையில் ஆசிரியர் பிரகாஷின் செயல் குறித்து தெரிய வந்ததை அடுத்து அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பின்னர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories