இந்தியா

"ஏமாற்றிதான் தேர்வில் பாஸ் ஆனேன்,அதில் நான் Ph.D முடித்தவன்" -சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!

பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் ஏமாற்றிதான் பாஸ் ஆனேன். அதில் நான் Ph.D முடித்தவன் முடித்தவன் என கர்நாடக பாஜக அமைச்சர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஏமாற்றிதான் தேர்வில் பாஸ் ஆனேன்,அதில் நான் Ph.D முடித்தவன்" -சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பழங்குடியின நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீராமுலு. இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் அவர் அந்த நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டுள்ளார்.

அப்போது தன்னுடைய கடந்த காலம் குறித்து பேசிய அவர், வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றாய் என ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் காப்பி அடித்துத்தான் தேர்ச்சி பெற்றேன் எனத் தெரிவித்தேன். "பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் ஏமாற்றிதான் பாஸ் ஆனேன். அதில் நான் Ph.D முடித்தவன் முடித்தவன்"என்று கூறினார்.

"ஏமாற்றிதான் தேர்வில் பாஸ் ஆனேன்,அதில் நான் Ph.D முடித்தவன்" -சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!

அவரின் இந்த பேச்சுக்கும் அங்கு இருந்த பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி போன்ற கரகோஷம் எழுப்பினர்.இந்த நிலையில், இவரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அமைச்சர் ஒருவர் இப்படி பேசியுள்ளது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

"ஏமாற்றிதான் தேர்வில் பாஸ் ஆனேன்,அதில் நான் Ph.D முடித்தவன்" -சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!

அதோடு அமைச்சர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.ஏற்கனவே கர்நாடக பாஜக அமைச்சர்கள் பல்வேறு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் தற்போது பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories