இந்தியா

முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தல்.. UP இடைதேர்தலில் பா.ஜ.க செய்த தகிடுதத்தம் அம்பலம்!

பெரும்பான்மை முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க வரவிடாமல் காவல்துறையினர் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சமாஜ்வாடி கட்சி பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியுள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தல்.. UP இடைதேர்தலில் பா.ஜ.க செய்த தகிடுதத்தம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தரப்பிரதேசம் ராம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை மக்களை வாக்களிக்க விடாமல், ஜனநாயக படுகொலையை நடத்தி அராஜக வெற்றி பெற்றுள்ளதாக சமாஜ்வாடி கட்சி பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தி இந்தியன் வெளியான எக்ஸ்பிரஸில் செய்தி கட்டுரை வருமாறு: கடந்த டிச.5ம் தேதி நடந்த ராம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தோல்வியடைந்ததற்கு அங்கு பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வராததே காரணம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தல்.. UP இடைதேர்தலில் பா.ஜ.க செய்த தகிடுதத்தம் அம்பலம்!

ராம்பூர் தொகுதி முஸ்லிம்களின் பெரும்பான்மை பெற்ற நிலையில் அது அசம்கானின் கோட்டையாகவே இருந்து வந்தது. அந்த தொகுதியில் பா.ஜ.க. ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பா.ஜ.க.-வின் வேட்பாளரான ஆகாஷ் சக்சேனா அங்கு பதிவான வாக்குகளில் 62 சதவீதத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அசம்கானின் ஆதரவாளரான அசிம் ராஜா சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 36 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பெரும்பான் மையாக உள்ள முஸ்லிம் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த விடாமல் பா.ஜ.க. நடந்துகொண்ட காரணத்தாலும், இந்துக்கள் பா.ஜ.க.வுக்கு பெரும்பான் மையாக வாக்களிக்க தூண்டப்பட்டதாலுமே பா.ஜ.க. தனது அராஜக வெற்றியை பெற்றுள்ளதாக சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தல்.. UP இடைதேர்தலில் பா.ஜ.க செய்த தகிடுதத்தம் அம்பலம்!

ராம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 65 சதவிகிதம் முஸ்லீம் வாக்காளர்கள் ஆவர். அவர்களில் பெரும் பாலானோர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 80 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வரும் நிலையில் இந்துக்கள் வாக்கு விகிதத்தை விட முஸ்லிம் வாக்கு விகிதம் கனிசமாக குறைந்ததே தங்கள் தோல்விக்கு காரணம் என்று சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது. அதாவது 3.8 லட் சம் வாக்காளர்களில் 2.7 லட்சம் பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசம்கான் 10 முறை ராம்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று வந்துள்ளார். அவருக்கு முஸ்லீம் வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதால் தொடர் வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.

முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தல்.. UP இடைதேர்தலில் பா.ஜ.க செய்த தகிடுதத்தம் அம்பலம்!

ராம்பூர் தொகுதியில் 325 வாக்குச்சாவடிகள் உள்ள நிலை யில், 77 வாக்குச்சாவடிகளில் உள்ள இந்துக்களின் ஓட்டு 46 சதவிகிதம் பதிவாகியுள்ளது. ஆனால் மீதமுள்ள 248 வாக்குச் சாவடிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்களில் வெறும் 23 சதவிகிதத்தினர் மட்டுமே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு தங்களது பெரும் பான்மையைத் தட்டிப் பறித்து வெற்றியை அராஜகமாக பா.ஜ.க. பெற்றதாக சமாஜ்வாடி கட்சியின் அசம்கான் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் முஸ்லீம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள பீலாதளப் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் வெறும் 4 சதவிகிதமும்; கோத்திபாலே சாலை வாக்குச்சாவடிகளில் வெறும் 5 சதவிகிதமும், பளுாரியா ஹிமத்கான் பகுதி வாக்குச்சாவடிகளில் வெறும் 7 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராம்பூர் நகர்ப்புறங்களில் உள்ள வாக்குச்சாவ டிகளில் ஒட்டுமொத்தமாக முஸ்லீம் வாக்காளர்கள் 20 சதவிகிதம் மட்டுமே வாக்களிக்க வந்துள்ளனர். ஆனால், பெரும்பான்மை இந்துக்கள் உள்ள ராம்பூர் நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் சுமார் 74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்தல்.. UP இடைதேர்தலில் பா.ஜ.க செய்த தகிடுதத்தம் அம்பலம்!

கிராமப்புறங்களில், அதாவது இந்துக்கள் பெரும் பான்மை 32 கிராமப்புற வாக்குச்சாவடிகளில் 60 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. அவ் வகையில் பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பெரும் பான்மை முஸ்லீம் வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுத்து ஜனநாயகத்தை வேரறுத்துள்ளதாக அசம்கான் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சமாஜ்வாடி வேட்பாளருமான அசிம்ராஜா மற்றும் கட்சி மூத்த உறுப்பினர் அசம்கான் ஆகியோர் முஸ்லிம் வாக்களர்களை தவறாமல் வாக்களிக்க வேண்டி கேட்டுக்கொண்டது வீணாகப் போய்விட்டது. பெரும்பான்மை முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க வரவிடாமல் காவல்துறையினர் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories