இந்தியா

வேகமாக எதிரே வந்த ரயில்.. சாதுரியமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய தாய் மற்றும் மகன்: திக் திக் நிமிடம்!

கர்நாடகாவில் ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிக்கி தாய் மற்றும் மகன் உயிர் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேகமாக எதிரே வந்த ரயில்.. சாதுரியமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய தாய் மற்றும் மகன்:  திக் திக் நிமிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் கலபுர்கி ரயில் நிலையத்தில் தாய், மகன் இருவரும் மூன்றாவது நடைமேடையிலிருந்து முதல் நடை மேடைக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் நடைபாதையை பயன்படுத்தாமல் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

அப்போது, எதிரே சரக்கு ரயில் வேகமாக வந்துள்ளது. இதைபார்த்த இருவரும் நடைபாதையின் மேலே ஏற முயன்றனர். அதற்குள் ரயில் இவர்கள் இருவரையும் நெறுங்கிவிட்டது. இதைக் கவனித்த மகன் தனது தாயை இழுத்து தண்டவாளத்திற்கும் நடைபாதை சுவருக்கும் இடையே இருந்த சிறிய பகுதியில் அமரவைத்து, அவரும் தாயோடு சேர்ந்து பல்லிபோல் ஒட்டிக் கொண்டுள்ளனர்.

வேகமாக எதிரே வந்த ரயில்.. சாதுரியமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய தாய் மற்றும் மகன்:  திக் திக் நிமிடம்!
வேகமாக எதிரே வந்த ரயில்.. சாதுரியமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய தாய் மற்றும் மகன்:  திக் திக் நிமிடம்!
வேகமாக எதிரே வந்த ரயில்.. சாதுரியமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய தாய் மற்றும் மகன்:  திக் திக் நிமிடம்!

இதைக் கவனித்த பயணிகள் அலறியடித்துச் சத்தம்போட்டனர். பிறகு சரக்கு ரயில் சென்ற பிறகு இருவரும் நடைபாதை மேல் ஏறி உயிர் தப்பியுள்ளனர். இந்த பயங்கர காட்சியை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

தற்போது, தாய் மகன் இருவரும் ரயில் மற்றும் தண்டவாள தடுப்புச் சுவர் இடையே சிக்கிக் கொண்டு பத்திரமாக மீண்டும் வெளியே வந்த திக் திக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

banner

Related Stories

Related Stories