இந்தியா

காதலியின் தோழி மீது ஆசை.. living உறவிலிருந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த காதலன்!

பெங்களூருவில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலியைக் கொலை செய்த வாலிபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலியின் தோழி மீது ஆசை..  living உறவிலிருந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த காதலன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேப்பால் நாட்டைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் தமி, கிருஷ்ண குமாரி. காதலர்களான இவர்கள் இருவரும் பெங்களூரு நகரில் வாடகைக்கு வீடு எடுத்துக் கடந்த ஒரு வருடமாக லிவ்-இன் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மேலும் சந்தோஷ் தமி கடந்து மூன்று‌ வருடமாகப் பெங்களூருவில் ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் கிருஷ்ண குமாரியும் ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் ஒரே துறையில் வேலை செய்து வந்ததால் இவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டு பிறகு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்துதான் இவர்கள் இருவரும் ஒன்றாக லிவ்-இன் டுகெராக வாழ்ந்து வந்தனர்.

காதலியின் தோழி மீது ஆசை..  living உறவிலிருந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த காதலன்!

இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த போதிலும் சந்தோஷ் தமி பல பெண்கள் உடன் பழகி வந்துள்ளார். மேலும், காதலி கிருஷ்ண குமாரியின் நெருங்கிய தோழியிக்கு சந்தோஷ் தமி கடந்த சில வாரங்களாக காதல் வலைவீசியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று காதலியின் தோழிக்கு வீடியோ கால் செய்து சந்தோஷ் சமி தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது தோழியின் அருகே கிருஷ்ண குமாரி இருந்துள்ளார்.

பிறகு வீட்டிற்குச் சென்று காதலனுடன் இது குறித்துக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பிறகு சிறிது நேரம் கழித்து சந்தோஷ் தொலைப்பேசியில் இருந்து கிருஷ்ணகுமாரி தோழிக்கு வீடியோ கால் ஒன்று சென்றுள்ளது. அதில் கிருஷ்ணகுமாரியை சந்தோஷ் கடுமையாகத் தாக்கும் காட்சி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தோழி நண்பர்களை அழைத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றுள்ளார்.

காதலியின் தோழி மீது ஆசை..  living உறவிலிருந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த காதலன்!

அப்போது அறையில் கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் படுக்கையிலிருந்துள்ளார். மற்றொரு புறம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷ் மது குடித்துக் கொண்டிருந்துள்ளார். பிறகு நண்பர்கள் கிருஷ்ண குமாரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ் சமியை கைது செய்து விசாரணையில், தோழிக்கு காதல் தொல்லை கொடுத்ததை தட்டிக் கேட்டதால் காத்திரத்தில் அடித்து காதலியை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலியைக் காதலனே அடித்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories