இந்தியா

ஒரு ஆணுக்காக நடுரோட்டில் மல்லுக்கட்டிக் கொண்ட 5 பெண்கள்.. இணைத்தில் வைரலாகும் வீடியோ!

பீகார் மாநிலத்தில் ஒரு ஆணுக்காக ஐந்து பெண்கள் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு ஆணுக்காக நடுரோட்டில் மல்லுக்கட்டிக் கொண்ட 5 பெண்கள்.. இணைத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம், சோன்பூர் பகுதியில் நடந்த கண்காட்சிக்கு இளைஞர் ஒருவர் தனது காதலியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞரின் மற்றொரு காதலி இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

மேலும் அவர் என்னுடைய காதலன் என கூறி இருவரும் சண்டைபோட்டுள்ளனர். அப்போது திடீரென மூன்றாவதாக வந்த பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து சண்டைபோட்டுள்ளார். பின்னர் அடுத்தடுத்து 2 பெண்களும் வந்து சண்டை போட்டுள்ளனர்.

இப்படி 5 பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோதுதான் இந்த இளைஞர் இவர்கள் 5 பேரையும் ஏமாற்றிக் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து அந்த இளைஞரே தான் கூட்டிவந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இணைய வாசிகள் கிண்டல் அடித்தும் விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு ஆணுக்காக நடுரோட்டில் மல்லுக்கட்டிக் கொண்ட 5 பெண்கள்.. இணைத்தில் வைரலாகும் வீடியோ!

அந்த வீடியோவில், ஐந்து பெண்களும் ஒருவரை மாறி ஒருவர் முடியால் இழுத்தும், உதைத்தும் சண்டைபோட்டுக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories