இந்தியா

“I LOVE YOU அன்பே..” -ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள் : VIDEO வெளியானதையடுத்து தட்டி தூக்கிய உபி போலிஸ்!

கல்லூரி ஆசிரியரை பார்த்து மாணவர்கள் சிலர் காதலிப்பதாக கூறி கிண்டல் செய்து வந்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“I LOVE YOU அன்பே..” -ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள் : VIDEO வெளியானதையடுத்து தட்டி தூக்கிய உபி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இன்டர்மீடியட் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. ஆண்கள், பெண்கள் என இந்த கல்லூரியில் பல்வேறு மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரியும் பெண் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் சிலர் அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்தனர்.

மாணவர்களை ஆசிரியர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் செவி கொடுத்து கூட கேட்கவில்லை. மேலும் ஆசிரியரை பெயர் சொல்லி கூப்பிடுவது, ஒருமையில் அழைப்பது, போட்டோ - வீடியோக்கள் எடுப்பது உள்ளிட்ட செய்லகளிலும் மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

“I LOVE YOU அன்பே..” -ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள் : VIDEO வெளியானதையடுத்து தட்டி தூக்கிய உபி போலிஸ்!

இது தொடர்ந்து நடைபெற்று வந்ததால் பலமுறை அவரும் எச்சரித்துள்ளார். இருப்பினும் அதனை மாணவர்கள் கண்டுக்கவே இல்லை. இப்படி தொடர்ந்து செய்து வந்த இவர்களது சேட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிதாக ஆகியுள்ளது. அந்த ஆசிரியர் பள்ளிக்குள் சென்று கொண்டிருப்பதை பார்த்த மாணவர்கள், அவரை அழைத்துள்ளனர்.

ஆசிரியர் கண்டுகொள்ளாமல் சென்றபோது, அவரிடம் "ஐ லவ் யூ மேம்.. ஓய்.. மேம் ஜீ.. ஐ லவ் யூ.. மேரி ஜான்.." என்று கூறி அட்டகாசம் செய்துள்ளனர். மேரி ஜான் என்றால் அன்பே என்று பொருள். இதனால் மிகவும் கோபம் கொண்ட ஆசிரியர், இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, மாணவர்களின் பெற்றோரிடமும் புகார் தெரிவித்தார்.

“I LOVE YOU அன்பே..” -ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள் : VIDEO வெளியானதையடுத்து தட்டி தூக்கிய உபி போலிஸ்!

இருப்பினும் அவர்கள் அடங்காமல், அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது வைரலானதையடுத்து ஆசிரியரின் குடும்பத்தார் அவரை கண்டித்துள்ளனர். இதையடுத்தே இது குறித்து ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மீது IPC பிரிவு 354, 500, 67 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கல்லூரி ஆசிரியரை மாணவர்கள் சிலர் காதலிப்பதாக கூறி கேலி, கிண்டல் செய்து வந்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories