இந்தியா

வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !

இளைஞர்களை தனி அறையில் அடைத்து கடுமையாக தாக்கும் மருத்துவமனை ஊழியர்களின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் சர்தார் மருத்துவமனை அமைந்துள்ளார். இங்கு மருத்துவச் சான்றிதழ் வாங்குவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். வந்தவர்கள் மருத்துவமனையை தாங்கள் கொண்டுவந்திருந்த செல்போனால் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது இதனைப் பாரத மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை பிடித்து தனி அறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெண்களை வீடியோ எடுப்பதாக கூறி தாங்கள் வைத்திருந்த தடிமனான கம்பை வைத்து அந்த இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், "உன் வீட்டுப் பெண்களை இப்படி வீடியோவாக எடுப்பியா" எனக் கூறிக்கொண்டே அந்த இளைஞர்களை மருத்துவமனையில் பணிபுரியும் பெண்கள் தாக்கியுள்ளனர்.

ஆனால் அந்த இளைஞர்களோ "மருத்துவமனையில் இருக்கும் குறைகளைத்தான் வீடியோவாக எடுத்தோம்" என பதிலளித்து அதனை ஏற்காத மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை தொடர்ந்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இளைஞர்களை தாக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகவலைத்தளங்களில் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதோடு, சிலர் அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories