இந்தியா

டேய்.. எப்புட்றா..! ரயில் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக கழற்றி ஆட்டையை போட்ட கும்பல்: பீகாரில் பகீர்!

பீகாரில் ரயில் எஞ்சினையே மர்ம கும்பல் பார்ட் பார்ட்டாக கழற்றி காயலாங்கடையில் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேய்.. எப்புட்றா..!  ரயில் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக கழற்றி ஆட்டையை போட்ட கும்பல்:  பீகாரில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் ரயில்களில் திருட்டு நடப்பதை பற்றித்தான் கேள்வி பட்டிருப்போம். ஆனால் ரயில் எஞ்சினையே திருடப்பட்டுள்ளது என்று நாம் எப்போதாவது கேள்வி பட்டிருப்போமா?. ஆனால் அப்படி ஒரு சம்பம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் க்ரஹாரா என்ற ரயில் நிலையம் உள்ளது. இங்கு டீசல் எஞ்சின் ஒன்று பல மாதங்களாக அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திடீரென அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எஞ்சின் காணாததைக் கண்டு ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டேய்.. எப்புட்றா..!  ரயில் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக கழற்றி ஆட்டையை போட்ட கும்பல்:  பீகாரில் பகீர்!

பின்னர் போலிஸார் திருட்டு கும்பல்களிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. ரயில் எஞ்சின் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே பயன்பாடற்ற சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட கும்பல் ஒன்று, ரயில் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி 13 சாக்கு மூட்டைகளில் எடுத்துக் சென்று காயலாங்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் காயலாங்கடையில் சென்று பார்த்தபோது ரயில் எஞ்சினின் உடைந்த பாகங்கள் இருந்ததை உறுதி செய்துள்ளனர். பிறகு மூன்று பேரை போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேய்.. எப்புட்றா..!  ரயில் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக கழற்றி ஆட்டையை போட்ட கும்பல்:  பீகாரில் பகீர்!

மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது போலிஸாருக்கு குழப்பமாகவே இருக்கிறது. இங்குதான் இப்படி என்றால் ராணிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பாலத்திலிருந்த இரும்பு பொருட்களையும் மற்றொரு கும்பல் திருடிச் சென்றுள்ளது. இதனால் பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு போலிஸார் ஒருவர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர். திருடவே முடியாது என நினைத்த பொருட்களையே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது பீகார் போலிஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories