இந்தியா

தனியே நடந்துசென்ற ஆணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி!

சாலையில் தனியே நடந்துசென்ற ஆணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியே நடந்துசென்ற ஆணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பெயர் வெளியிடப்படாத நபர் பேக்டரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஞாயிறு அன்று பணியை முடித்து விட்டு முக்கிய சாலை ஒன்றின் வழியே வழக்கம்போல தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் அருகே ஒரு கார் வந்து நின்றுள்ளது. அதில் இறந்த 4 பெண்கள் இவரிடம் ஒரு முகவரி குறித்து கேட்டுள்ளனர். அதற்கு இந்த நபர் பதில் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அவர் மேல் அந்த பெண்களில் ஒருவர் திரவத்தை அடித்துள்ளார்.

தனியே நடந்துசென்ற ஆணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி!

இதில் அதிச்சியடைந்த அவர் அதே இடத்தில மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை காரில் கடத்திய அந்த பெண்கள் ஆள் ஏதும் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று இரவு முழுவதும் அந்த நபரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

11 முதல் 12 மணி நேரம் அந்த ஆணை வன்கொடுமை செய்த அந்த பெண்கள் பின்னர் அவரை ஆடை ஏதும் அணிவிக்காமல் ஆள் ஏதும் இல்லாத இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அங்கு இருந்தவர்கள் உதவியுடன் அவர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனியே நடந்துசென்ற ஆணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி!

இந்த சம்பவம் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படாத நிலையில், தெரிந்தவர்கள் மூலம் இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories