இந்தியா

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கரோடி பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு (நவம்பர் 19) மாலை ஆட்டோவில் சென்ற பயணியின் பையிலிருந்த பார்சல் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் ஆட்டோவில் சென்ற பயணியும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வெடி சம்பவம் குறித்து கர்நாடக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஆட்டோவில் பயணித்தவர் முகமது ஷரீக் என்பதும், அவர் கொண்டு வந்த குக்கரில் வெடிகுண்டு வைத்து வெடித்ததும் தெரியவந்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரீக், மைசூரிலிருந்து ஹூன்சூர், மடிக்கேரி, புத்தூர், பி.சி. ரோடு வழியாக நாகுரியில் இறங்கி ஆட்டோவில் பம்ப்வெல் நோக்கிச் சென்றபோது தான் அந்த குக்கர் வெடித்து சிதறியதும் தெரியவந்தது.

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலிசார் விசாரித்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் (60) கொடுத்த புகாரின் பேரில் கங்கனாடி டவுன் காவல் நிலையத்தில் பிரிவு 120 (பி) மற்றும் 307 ஐபிசி மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு சம்பவம் நடத்த இடத்தில் இருந்து ஆதார் அட்டையை மீட்டுள்ள போலிசார், அது குறித்து விசாரிக்கையில், அதில் ஹுப்பள்ளி முகவரியுடன் பிரேம்ராஜ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் விசாரிக்கையில், பிரேம்ராஜின் ஆதார் அட்டை காணாமல் போனதும், அவரது அட்டையை இவர் தவறாக பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்ட்டது.

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !

மேலும் தொடர்ந்து விசாரணை செய்ததில், ஷரீக்கின் மைசூருவில் உள்ள வாடகை வீட்டில் சல்பர் பவுடர், நட்ஸ், போல்ட், சர்க்யூட்கள், மல்டி ஃபங்ஷன் டிலே டைமர்கள், கிரைண்டர், தீப்பெட்டி, பேட்டரி, மெக்கானிக்கல் டைமர்கள், ஆதார் கார்டுகள், அலுமினிய ஃபாயில், சிம் கார்டுகள், மொபைல் டிஸ்ப்ளே போன்ற பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. மற்றும் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டதாவது, "குற்றவாளி முகமது ஷரீக் என்று அடையாளம் தெரிந்ததையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி மங்களூரு காவல்துறை குழு பல்வேறு பரிமாணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. ஷரீக் வந்த வழித்தடத்தை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !

ஆனால் விசாரணையின் திசையைத் தவிர்க்க ஷரீக் ஒரு பெரிய திட்டத்தை கையில் வைத்திருந்தார். மேலும் மைசூரில் இருந்து புறப்பட்ட ஷரீக் முதலில் மடிகேரியில் பேருந்திலிருந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் வேறு பேருந்தில் ஏறி மடிகேரியில் இருந்து புத்தூருக்கு வந்துள்ளார்.

ஷரீக், புத்தூரில் இருந்து பிசி ரோட்டில் இறங்கிய பிறகு அங்கிருந்து பம்ப்வெல் பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளார். குற்றவாளியின் "டார்கெட் மங்களூர்" வெற்றி பெற்றால், விசாரணையிலிருந்து தப்பிக்க ஷரீக் ஒரு பிளானும் ரெடியாக வைத்திருந்தார். ஆனால் அவரே எதிர்பாராத விதமாக மங்களூர் டார்கெட் திட்டம் தோல்வியடைந்து குண்டு வெடித்து சிதறியது.

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !

ஷரீக் பம்பவெல் பகுதியை அடைந்து அந்த இடத்தை சரிபார்த்துவிட்டு நாகுரியை நோக்கி நடந்து வந்து மீண்டும் பம்ப்வெல் வரை ஆட்டோவில் ஏறிச்சென்றபோதுதான் இந்த குக்கர்குண்டு வெடித்து சிதறியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பு ஷரீக், ஒரு பெரிய பையை சுமந்து கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு செல்லும் சிசிடிவி வீடியோ காவல்துறை சார்பில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஷரீக் சுமந்து செல்லும் பையில் குக்கர் குண்டை இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மங்களூரு நகரில் பாடில் என்ற பேருந்து நிலையத்தில் சாரிக் இறங்கி குண்டு வெடிப்பு நடந்த நாகோரி பகுதிக்கு செல்லும் முன் பேருந்து நிலையம் அருகே இருந்த மதுபான கடையில் இருந்த சிசிடிவி யில் இந்த காட்சி பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories