குழந்தைகளை தனியே தவிக்க விட்டு காதலனுடன் சென்ற சகோதரியை கொடூரமாக கொன்றுள்ள சகோதரின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் என்ற பகுதி உள்ளது. இங்கே இருக்கும் ஆசாரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஆரிப். 30 வயது இளைஞரான இவர், வீடு வீடாக சென்று பொருள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மஹ்ஜபீன் (வயது 27) என்ற இளம்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிய வரவே, பெண்ணின் குடும்பத்தினர் அவரை எச்சரித்துள்ளனர். மேலும் இனி அவரை சந்திக்க கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் இருவரும் சந்திக்க முடியாமல் போய்யுள்ளது. தனது காதலனை விட்டு இருக்க முடியாத காதலி, தனது குழந்தைகளை விட்டு அவருடன் வீட்டை வெளியேற திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஒரு நாள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தாயை காணவில்லை என்று ஒரு பக்கம் குழந்தைகள் பரிதவிக்க, மறுபக்கம் பெண்ணின் சகோதரர் இருவரையும் வலைவீசி தேடியுள்ளார். பின்னர் இருவரும் மீரட் நகரில் வசித்து வருவதாக சகோதரர் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்துள்ளார்.
சொந்த ஊருக்கு வந்த அவர்களை, பெண்ணின் சகோதரர் கொடூரமான முறையில் வெட்டி கொன்றுள்ளார். பின்னர் காதலனின் சடலத்தை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலும், பெண்ணின் சடலத்தை காட்டு பகுதியிலும் வீசிவிட்டு அவரே வந்து காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
மேலும் அவரிடம் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளை தனியே தவிக்க விட்டு காதலனுடன் சென்ற சகோதரியை கொடூரமாக கொன்றுள்ள சகோதரின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.