இந்தியா

9 மாதங்களாக தொடர் போராட்டம்.. மீண்டும் வரும் VLC Media Player: தடையை நீக்கியது இந்திய அரசு.. காரணம் என்ன?

இந்தியாவில் மிகவும் பிரபலமான VLC Media Player-க்கு, இந்திய அரசு விதித்திருத்த தடையை நீக்கி தற்போது உத்தரவிடபட்டுள்ளது.

9 மாதங்களாக தொடர் போராட்டம்.. மீண்டும் வரும் VLC Media Player: தடையை நீக்கியது இந்திய அரசு.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் மிகவும் பிரபலமான VLC Media Player-க்கு, இந்திய அரசு விதித்திருத்த தடையை நீக்கி தற்போது உத்தரவிடபட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர் என்றால் அது VLC Media Player தான். இந்த VLC Media Player செயலியை VideoLAN என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயலி மூலம் இந்தியர்கள் பலரும் பயனடைந்து வந்தனர்.

9 மாதங்களாக தொடர் போராட்டம்.. மீண்டும் வரும் VLC Media Player: தடையை நீக்கியது இந்திய அரசு.. காரணம் என்ன?

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல இந்திய இணைய சேவை நிறுவனங்கள் இந்த VLC Media Player செயலியை தடை செய்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்திய அரசாளும் இந்த செயலி தடை செய்யப்பட்டதாக செய்திகள் பரவின. இந்த தடைக்கான காரணங்கள் குறித்து பயனர்கள் பலரும் குழம்பி கொண்டிருந்த நிலையில் இந்த செயலியை எளிதாக ஹாக் செய்ய முடிகிறது என்ற தகவலும் பரவின.

அதாவது இந்த செயலி மூலம் சீன ஹாக்கர்கள், இந்தியர்களின் டேட்டா முதலானவற்றை திருடுகிறார்கள் என்றும் அதன் காரணமாகவே இந்த செயலி முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இருப்பினும் இது குறித்த எந்த ஒரு தகவலையும் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

9 மாதங்களாக தொடர் போராட்டம்.. மீண்டும் வரும் VLC Media Player: தடையை நீக்கியது இந்திய அரசு.. காரணம் என்ன?

இதையடுத்து இது குறித்து வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த VLC நிறுவனம், இதே போல் இருந்த போலி செயலி மூலம் ஹாக்கர்கள் முயற்சி செய்ததாகவும், Play Store உள்ளே இருக்கும் VLC app-ஐ யாரும் ஹாக் செய்யவில்லை என்று விளக்கமளித்தது.

மேலும் எந்தவித காரணமும் சொல்லாமல், முன் அறிவிப்பும் இல்லாமல் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டதால், இது தொடர்பாக விளக்கம் கேட்டு VideoLAN நிறுவனம் சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பியது.

9 மாதங்களாக தொடர் போராட்டம்.. மீண்டும் வரும் VLC Media Player: தடையை நீக்கியது இந்திய அரசு.. காரணம் என்ன?

தொடர்ந்து 9 மாதங்களாக VideoLAN நிறுவனம் நடத்திய சட்ட போராட்டத்தால், தற்போது இந்திய அரசு VLC Media Player மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த தகவலின் படி, மீண்டும் VLC Media Player-ஐ பயனர்கள் பயன்படுத்தலாம் எனவும், இதனை Apple Store, Google Play Store மற்றும் VLC Website போன்ற இடங்களில் Download செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories