இந்தியா

“புது Fridge.. ஊது பத்தி.. பாதுகாக்கப்பட்ட தலை..” - டெல்லி 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி வழக்கில் ஷாக்!

திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியை காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியெறிந்துள்ள சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“புது Fridge.. ஊது பத்தி.. பாதுகாக்கப்பட்ட தலை..” - டெல்லி 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி வழக்கில் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியை காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியெறிந்துள்ள சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல கால் சென்டரில் வேலை பார்த்தவர் ஷர்தா என்ற இளம்பெண். இவர் ஒரு ஃபுட் Bloggerம் கூட. இந்த நிலையில் இவருக்கும் இவர் வேலை பார்த்து வந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அது காதலாக மாற, இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் இருவரும் மும்பையில் இருந்து டெல்லி வந்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

“புது Fridge.. ஊது பத்தி.. பாதுகாக்கப்பட்ட தலை..” - டெல்லி 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி வழக்கில் ஷாக்!

இதற்கிடையில், ஷ்ரதா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை. இதனால் தந்தை விகாஸ்மதன் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்துள்ளார். பிறகு மகள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து புனவல்லாவை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலர்கள் டெல்லி வந்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷ்ரதா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி புனவல்லாவிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

“புது Fridge.. ஊது பத்தி.. பாதுகாக்கப்பட்ட தலை..” - டெல்லி 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி வழக்கில் ஷாக்!

அதே போல் சம்பவத்தினரும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த புனவல்லா காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு போலிஸாரிம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார்.

பின்னர், நள்ளிரவில் வெட்டப்பட்ட துண்டுகளை எடுத்துக் கொண்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார். இப்படி 18 நாட்களாக 35 துண்டுகளை அப்புறப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர்.

“புது Fridge.. ஊது பத்தி.. பாதுகாக்கப்பட்ட தலை..” - டெல்லி 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி வழக்கில் ஷாக்!

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "குற்றவாளி அஃப்தாப் அமீன், கிரைம் சீரிஸ், படங்கள் பார்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்துள்ளார். எனவே தனது காதலியை கொன்ற பிறகு அவரது உடல் பாகங்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது தொடர்பான கிரைம் சீரிஸ்களையும் பார்த்ததாக தெரிகிறது.

“புது Fridge.. ஊது பத்தி.. பாதுகாக்கப்பட்ட தலை..” - டெல்லி 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி வழக்கில் ஷாக்!

பின்னர் அதன்படி அவரது வெட்டப்பட்ட உடல் பாகங்களை பல நாட்களாக பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தி தினந்தோறும் சில சில துண்டுகளை காட்டு பகுதி, மலைப்பகுதி உள்ளிட்டவைகளில் வீசியுள்ளார். மேலும் தனது வீட்டில் எந்த துர்நாற்றமும் வராமல் இருக்க ஊதுபத்தி உள்ளிட்ட வாசனை திரவங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

காதலியின் உடலை ஒரு நாள் முழுவதும் இருந்து துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அனைத்து துண்டுகளையும் வீசிய பிறகு பல நாட்கள் கழித்தே அவரது தலையை தூக்கி எறிந்துள்ளார். தற்போது அவர் அளித்த தகவலின் பேரில் 13 எலும்பு துண்டுகளை கண்டுபிடித்துள்ளோம்" என்றனர். இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories