இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை.. பாலியல் ஊக்க மாத்திரையால் நேர்ந்த சோகம்.. உ.பி-யில் அதிர்ச்சி !

பாலியல் ஊக்க மாத்திரையை உட்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை.. பாலியல் ஊக்க மாத்திரையால் நேர்ந்த சோகம்.. உ.பி-யில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேசம்,டெல்லி போன்ற இடங்களில் தொடர்ந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிர்க்கரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடந்துள்ள வன்கொடுமையை கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள உன்னாவ் என்ற நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியே இருந்துள்ளார். மாணவி தனியே இருப்பதை அதே பகுதியை சேர்ந்த ராஜ் கவுதம் (வயது 25) என்பவர் கவனித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய தீர்மானித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை.. பாலியல் ஊக்க மாத்திரையால் நேர்ந்த சோகம்.. உ.பி-யில் அதிர்ச்சி !

இதற்காக தான் வைத்திருந்த பாலியல் ஊக்க மாத்திரையை உட்கொண்ட அவர் மாணவியின் வீட்டினுள் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த மோசமான செயலால் மாணவியின் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.சிறிது நேரத்துக்கு பிறகு வீட்டுக்கு வந்த அந்த மாணவியின் சகோதரி மாணவியின் நிலையை அறிந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை.. பாலியல் ஊக்க மாத்திரையால் நேர்ந்த சோகம்.. உ.பி-யில் அதிர்ச்சி !

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதவுசெய்த போலிஸார் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ் கவுதம் என்ற இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories