தேர்தல் 2024

“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!

நாட்டை யாரிடம் ஒப்படைக்க போகிறீர்கள் என்று பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேட்ட கேள்விக்கு மக்கள் ராகுல் காந்தி என்று பதிலளித்த நிலையில், திகைத்து போன பாஜக நிர்வாகி.

“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்ட தேர்தலுக்காக NDA மற்றும் இந்தியா கூட்டணி காட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தற்போது பாஜகவுக்கு எதிராக மக்கள் எழுந்துள்ளதை காண முடிகிறது. மக்கள் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாஜகவை, இந்த தேர்தலில் அவர்களே வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர். நாடு முழுவதும் மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் மக்கள் ஆரவார வரவேற்பு அளித்து வருவதோடு, பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பாஜக நிர்வாகிகளை மக்கள் ஓட ஓட விரட்டி வருகின்றனர்.

“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் (Kolhapur) மாவட்டத்தின் பாஜக தலைவராக ஷோமிக் மகாதிக் (Shomikh Mahadik) என்ற பெண் இருந்து வருகிறார். இந்த சூழலில் இவர் நேற்று பாஜக கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசியதோடு ராகுல் காந்திக்கு எதிராகவும் பேசினார்.

இதைத்தொடர்ந்து "நாட்டை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள்? ராகுல் காந்தியா அல்லது நரேந்திர மோடியா?" என்று கேள்வியெழுப்பினார். அப்போது கீழே இருந்த மக்கள் உடனே 'ராகுல் காந்தி' என்று நெகிழ்ச்சியாக பதில் அளித்தனர். இதனை கேட்ட பாஜக பெண் நிர்வாகி ஷோமிக் மகாதிக், உடனே சிரித்துக்கொண்டே சமாளித்தார்.

“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!

மேலும் மக்களின் இந்த பதிலால் ஷோமிக் மகாதிக் வாயடைத்தும் போனார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories