இந்தியா

100 கிலோ இரும்பை திருடிய இளைஞர்கள்.. 1 மணி நேரம் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள்!

பீகாரில் இரும்பு திருடியதாகக் கூறி 2 இளைஞர்களைக் கட்டி வைத்து கிராமமே தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

100 கிலோ இரும்பை திருடிய இளைஞர்கள்.. 1 மணி நேரம் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட மாநிலங்களில் சில மாதங்களாகவே கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுவெளியிலேயே திருடியதாகக் கூறி கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடிக்கும் வீடியோக்கள் தொடர்ந்து இணையங்களில் வைரலாகி வருகிறது.

தற்போதும் பீகாரில் இதேபோன்று ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சம்பவங்களைத் தடுக்காமல் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

100 கிலோ இரும்பை திருடிய இளைஞர்கள்.. 1 மணி நேரம் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள்!

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள இரும்பு கடை ஒன்றிலிருந்து 100 கிலோவுக்கு இரும்பு திருடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் நேற்று இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்த அப்பகுதி மக்கள் இருவர் மீதும் சந்தேகம் அடைந்துள்ளனர். பிறகு அவர்களைப் பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பி ஒட முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

100 கிலோ இரும்பை திருடிய இளைஞர்கள்.. 1 மணி நேரம் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள்!

இதையடுத்து ஒருவரையும் கம்பியில் கட்டி வைத்து ஒரு மணி நேரம் அடித்துள்ளனர். இதில் இரண்டு இளைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருவரையும் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 கிலோ இரும்பை திருடியதாகக் கூறி இளைஞர்களை கம்பிடியல் அடித்து வைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories