இந்தியா

குடிபோதையில் பெண் நோயாளியை சரமாரியாக அடித்த மருத்துவர்.. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் குடிபோதையில் மருத்துவர் ஒருவர் நோயாளியை அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் பெண் நோயாளியை சரமாரியாக அடித்த மருத்துவர்.. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதால்தான் மருத்துவர்களை நாம் கடவுளாகப் பார்க்கிறோம். ஆனால் நாம் சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் நம்மை அடித்தால் நமக்கு எப்படி இருக்கும். அப்படி ஒரு கொடூரமான சம்பவம் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்திற்குட்பட்ட கெர்வானி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவரது தாயார் சுக்மதி. இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனே ஷியாம் குமார் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புளன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் தாங்கள் வருவதற்குக் காலதாமதம் ஆகும் என கூறியுள்ளனர்.

இதனால் தாயாரை ஆட்டோவிலேயே கோர்பாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சுக்மதிக்கு சிகிச்சை செய்துள்ளார். பிறகு திடீரென மருத்துவர் அவரை அடித்துள்ளார்.

குடிபோதையில் பெண் நோயாளியை சரமாரியாக அடித்த மருத்துவர்.. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஷியாம் குமார் மருத்துவரைத் தடுத்து தனது தாயாரைக் காப்பாற்றியுள்ளார். அப்போது மருத்துவர் அவரிடம் நீ அமைதியாக இரு என ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மருத்துவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர் பணியில் இருந்தபோது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories