இந்தியா

காசு இல்ல.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை: பீகாரை உலுக்கிய சம்பவம்!

பீகாரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசு இல்ல..  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை: பீகாரை உலுக்கிய சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட நியூ ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் கேதர் லால் குப்தா. பழ வியாபாரியான அவரது மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, சாஷி குமாரி. மகன் பிரின்ஸ் குமார் உள்ளனர்.

இந்நிலையில் பழ வியாபாரம் நன்றாகச் செல்லாததால் குடும்பத்தில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேதர் லால் குப்தா மணீஷ் குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

காசு இல்ல..  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை: பீகாரை உலுக்கிய சம்பவம்!

இதனால் மணீஷ் குமார், மூன்று நான்குபேருடன் குப்தா வீட்டிற்கு வந்து கடன் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது எல்லாம் ரூ.1000 கொடுத்து சமாதானம் படுத்தியுள்ளார். ஆனால் முழு பணத்தையும் கொடுக்க வேண்டும் என மணீஷ் குமார் மிரட்டிக் கூறியுள்ளார்.

பிறகு ஒட்டுமொத்த குடும்பம் மன உளைச்சலில் இருந்துள்ளது. மேலும் பழ வியாபாரத்தையும் சரியாக நடத்த முடியாததால் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுள்ளனர். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் முடிவெடுத்து விஷம் குடித்துள்ளனர்.

காசு இல்ல..  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை: பீகாரை உலுக்கிய சம்பவம்!

இதில் கேதர் லால் குப்தா. மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, மகன் பிரின்ஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு மகள் சாஷி குமாரி மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories